கே.பாக்யராஜ் நடத்தும் இது உங்க மேடை!

Bookmark and Share

கே.பாக்யராஜ் நடத்தும் இது உங்க மேடை!

பட்டிமன்றம், அரட்டை அரங்கம் போன்ற பேச்சாளர்களை மேடையேற்றும் நிகழ்ச்சிகளுக்கு நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும நீயா நானா நிகழ்ச்சி பெரிய அளவில் ரீச்சாகியிருக்கிறது.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நேயர்கள் தங்களது சொந்த வாழ்க்கை அனுபவங்களை தைரியமாக பகிர்ந்து கொண்டு வருவதோடு, நாளுக்கு நாள் அதுபோன்று மேடையேறி சொந்த கருத்துக்களை சொல்ல நேயர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தற்போது வேந்தர் டிவியிலும் நேயர்களை மேடையேற்றி பேச வைக்கும் ஒரு புதிய நிகழ்ச்சியை தொடங்குகிறார்கள்.

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு இது உங்க மேடை என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. டைரக்டர் கே.பாக்யராஜ் அந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்.

ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒவ்வொரு சுவராஸ்யமான தலைப்பினை எடுத்துக்கொண்டு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் பேசப்போகிறார்களாம். அதோடு, நிகழ்ச்சி சுவையாக இருக்க வேண்டும் என்பதற்காக, நல்ல திறமை வாய்ந்த பேச்சாளர்களாக தேர்ந்தெடுத்து மேடை ஏற்றுகிறார்களாம்.


Post your comment





Related News
“பாண்டியராஜனே கவலைப்பட்டால் நான் எங்கே போவது..?” நெகிழ்ந்த பாக்யராஜ்..!
ச்சீ..மெர்சல் பிரச்சனையை தீர்க்க இப்படி பேச கேவலமா இல்ல? - பிரபலத்தை வெளுத்து வாங்கிய நடிகர்.!
என் அண்ணனுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்து- விஜய்க்கு பிரபல நடிகரின் டுவிட்
சாந்தனுவுக்கு கீர்த்தி போட்ட கண்டிஷன்
விஜய்-அஜித் இருவரும் இந்த இயக்குனரின் அன்புக்கு கட்டுப்பட்டவர்கள்!
முதலில் நல்ல படம் கொடுங்கள் , திருட்டு வி சி டி பிறகு பாத்துக்கலாம் - கே பாக்யராஜ்
திருட்டு விசிடியை ஒழிப்பதற்குமுன் நல்ல படங்களை எடுங்கள்: திரையுலகினருக்கு பாக்யராஜ் வேண்டுகோள்
அந்த காலத்திலேயே ‘பாகுபலி’ எடுத்தவர் பாக்யராஜ்: இயக்குனர் வி.சேகர் புகழாரம்
பதவிஏற்புக்கு முன்பே விஷாலுக்கு பிரபல நடிகர் வைத்த கோரிக்கை
லவ் பண்றவங்க தயவு செய்து இத செக் பண்ணுங்க! பாக்கியராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions