பாக்யராஜிடம் கதை சொல்லப் பயந்த இயக்குநர்!

Bookmark and Share

பாக்யராஜிடம் கதை சொல்லப் பயந்த இயக்குநர்!

கே.பாக்யராஜிடம் உதவி இயக்குநராக இருந்தவர் பாரதி சோமு, இவர் திரைப்படங்களில் உதவி இயக்குநராகவும், இடைவெளிகளில் பாக்யா இதழிலும் வேலைபார்த்திருக்கிறார். அவர் இப்போது ஜி.ஏ.சோமசுந்தரா என்கிற பெயரில் காதல் காலம் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சந்துரு கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் கோவைக்காரர். கதாநாயகிகளாக நித்யா ஷெட்டி, சார்வி செக்குரி ஆகியோர் நடித்துள்ளனர். கோவை, ஈரோடு கிராமப் பகுதியில் நடக்கும் கதையாம் இது.

இதன் கதையை தன் குருநாதர் பாக்யராஜிடம் சொன்னாரா? என்று கேட்டால் திரைக்கதை மன்னரிடம் கதை சொல்வதா என்று பயந்து, தயங்கி கடைசி வரை சொல்லவே இல்லையாம்.

படம் தயாரானதும் போட்டுக் காட்டிக் கொள்ளலாம் என்று இருக்கிறாராம். பயமில்லாமல் அவரிடம் கதை சொல்லும் தைரியம் தனக்கில்லை என்று கடைசிவரை கதை சொல்லவே இல்லையாம்.


Post your comment





Related News
“பாண்டியராஜனே கவலைப்பட்டால் நான் எங்கே போவது..?” நெகிழ்ந்த பாக்யராஜ்..!
ச்சீ..மெர்சல் பிரச்சனையை தீர்க்க இப்படி பேச கேவலமா இல்ல? - பிரபலத்தை வெளுத்து வாங்கிய நடிகர்.!
என் அண்ணனுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்து- விஜய்க்கு பிரபல நடிகரின் டுவிட்
சாந்தனுவுக்கு கீர்த்தி போட்ட கண்டிஷன்
விஜய்-அஜித் இருவரும் இந்த இயக்குனரின் அன்புக்கு கட்டுப்பட்டவர்கள்!
முதலில் நல்ல படம் கொடுங்கள் , திருட்டு வி சி டி பிறகு பாத்துக்கலாம் - கே பாக்யராஜ்
திருட்டு விசிடியை ஒழிப்பதற்குமுன் நல்ல படங்களை எடுங்கள்: திரையுலகினருக்கு பாக்யராஜ் வேண்டுகோள்
அந்த காலத்திலேயே ‘பாகுபலி’ எடுத்தவர் பாக்யராஜ்: இயக்குனர் வி.சேகர் புகழாரம்
பதவிஏற்புக்கு முன்பே விஷாலுக்கு பிரபல நடிகர் வைத்த கோரிக்கை
லவ் பண்றவங்க தயவு செய்து இத செக் பண்ணுங்க! பாக்கியராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions