அலுவலகத்தை வீடாக மாற்றி குடியேறிய பாக்யராஜ்!

Bookmark and Share

அலுவலகத்தை வீடாக மாற்றி குடியேறிய பாக்யராஜ்!

இந்திய அளவில் திரைக்கதை மன்னன் என பெயரெடுத்தவர் கே.பாக்யராஜ். அவரது கதை, திரைக்கதை அவ்வளவு அழுத்தமாகவும், வலுவாகவும் இருக்கும். இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளரான இவர் சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் மூலம் இயக்குநராக களமிறங்கினார். தொடர்ந்து இவர் இயக்கிய இன்று போய் நாளை வா, அந்த 7 நாட்கள், தூரல் நின்னு போச்சு உள்ளிட்ட பல படங்கள் சூப்பர் ஹிட்டாகின. 

இயக்குநராக மட்டுமல்லாது ஒரு ஹீரோவாகவும் வெற்றி பெற்றார். சினிமாவில் சுமார் 35 ஆண்டுகளாக நீடித்து வரும் பாக்யராஜ், இதுநாள் வரை சென்னை, தி.நகரில் வசித்து வந்தார். இப்போது நுங்கம்பாக்கத்தில், போர் பிரேம்ஸ் தியேட்டர் அருகே இருந்த தன்னுடைய அலுவலகத்தை வீடாக புணரமைத்து, அதற்கு இன்று புதுமனை புகுவிழாவும் நடத்தியுள்ளார். பாக்யராஜூம், பூர்ணிமாவும் முன்னின்று பூஜை உள்ளிட்ட இதர சடங்குகளை செய்தனர். அவர்களோடு மகன் சாந்தனு, மகள் சரண்யாவும் கலந்து கொண்டனர்.

பாக்யராஜின் மகனும், நடிகருமான சாந்தனுவுக்கு ஆகஸ்ட் மாதம், கீர்த்தனாவுடன் திருமணம் நடைபெற இருக்கும் சூழலில் இப்போது தனது அலுவலகத்தை வீடாக மாற்றி அமைத்திருக்கிறார் பாக்யராஜ்.


Post your comment





Related News
“பாண்டியராஜனே கவலைப்பட்டால் நான் எங்கே போவது..?” நெகிழ்ந்த பாக்யராஜ்..!
ச்சீ..மெர்சல் பிரச்சனையை தீர்க்க இப்படி பேச கேவலமா இல்ல? - பிரபலத்தை வெளுத்து வாங்கிய நடிகர்.!
என் அண்ணனுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்து- விஜய்க்கு பிரபல நடிகரின் டுவிட்
சாந்தனுவுக்கு கீர்த்தி போட்ட கண்டிஷன்
விஜய்-அஜித் இருவரும் இந்த இயக்குனரின் அன்புக்கு கட்டுப்பட்டவர்கள்!
முதலில் நல்ல படம் கொடுங்கள் , திருட்டு வி சி டி பிறகு பாத்துக்கலாம் - கே பாக்யராஜ்
திருட்டு விசிடியை ஒழிப்பதற்குமுன் நல்ல படங்களை எடுங்கள்: திரையுலகினருக்கு பாக்யராஜ் வேண்டுகோள்
அந்த காலத்திலேயே ‘பாகுபலி’ எடுத்தவர் பாக்யராஜ்: இயக்குனர் வி.சேகர் புகழாரம்
பதவிஏற்புக்கு முன்பே விஷாலுக்கு பிரபல நடிகர் வைத்த கோரிக்கை
லவ் பண்றவங்க தயவு செய்து இத செக் பண்ணுங்க! பாக்கியராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions