
முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் கதாசிரியர்களுக்கென்று ஒரு இடம் இருந்தது. முன்னணி இயக்குனர்களே கதாசிரியர்களிடம் கதை வாங்கித்தான் அதற்கு திரைக்கதை வசனம் எழுதி இயக்குவார்கள். இந்த நிலை மலையாள சினிமாவில் இப்போதும் இருந்து வருகிறது.
ஆனால் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை கே.பாக்யராஜ் போன்ற இயக்குனர்களின் வருகைக்குப் பிறகு கதாசியர்களின் பெயர் சினிமா படங்களின் டைட்டில்களில் இடம்பெறவில்லை. காரணம், கதாசிரியர்களுக்கான வேலைகளையும் இயக்குனர்களே செய்யத் தொடங்கினர். தங்களது பெயருக்கு முன்னால் கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்று போட்டுக்கொள்ள ஆசைப்பட்டனர்.
குறிப்பாக, கே.பாக்யராஜின் வருகைக்குப்பிறகு அவரது உதவியாளர்களான பாண்டியராஜன், பார்த்திபன் ஆகியோரும் அவர் பாணியில் டைட்டீல் கார்டு போட்டதைப்பார்த்து ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் அதே பாணிக்கு மாறியது.
இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்ட கே.பாக்யராஜ், தமிழ் சினிமாவில் எழுத்தாளர்கள் குறைந்து போனதற்கு நானும் ஒரு காரணமாகி விட்டேன். என்னால்தான் தமிழ் சினிமாவில் கதாசிரியர்களுக்கான இடம் இல்லாமல் போனது. அதை இப்போதுதான் நான் உணர்கிறேன் என்று தனது பீலிங்ஸை வெளிப்படுத்தியுள்ளார் கே.பாக்யராஜ்.
Post your comment