தேர்தலில் நிற்கும் பாக்யராஜூம், ஜெயராமும்!

Bookmark and Share

தேர்தலில் நிற்கும் பாக்யராஜூம், ஜெயராமும்!

நீண்ட இடைவௌிக்கு பிறகு கே.பாக்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் துணை முதல்வர். இவருடன் ஜெயராமன் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

இவர்களுக்கு ஜோடியாக ஸ்வேதா மேனனும், சந்தியாவும் நடித்திருக்கிறார்கள். பாக்யராஜ், கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இப்படத்தை விவேகானந்தன் என்பவர் இயக்குகிறார். இப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

துணை முதல்வர் படம் குறித்து பாக்யராஜ் கூறியதாவது, துணை முதல்வர் படம் அரசியல் படம் தான், அதை கொஞ்சம் காமெடியாக சொல்லியிருக்கிறோம். படத்தில் நானும், ஜெயராமனும் எங்கள் ஊரில் அதிகம் படித்தவர்கள்.

நான் ஐந்தாம் கிளாஸ், ஜெயராமன் மூன்றாம் கிளாஸ். நாங்கள் இருவரும் தேர்தலில் போட்டியிடுகிறோம். நம்மூரில் தேர்தல், இடைத்தேர்தல் எல்லாம் நடக்கும்போது கட்சிக்காரர்கள், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் கொடுப்பது தொடங்கி, வாக்காளர்களிடம் தங்களுக்கு ஓட்டுபோட சத்தியம் வாங்குவது வரை... எல்லா விஷயங்களையும் இப்படத்தில் காமெடியாக சொல்லியுள்ளோம். 

துணை முதல்வர் படத்திற்கு சென்சார் போர்டு 8 கட்டு கொடுத்துள்ளனர். மேலும் பார் ஒன்றில் ஸ்வேதா மேனனும், சந்தியாவும் ஆடும் பாடலை தியேட்டரில் மட்டும் தான் ஔிப்பரப்ப வேண்டும், டி.விக்களில் ஔிப்பரப்ப கூடாது என்று தடை போட்டுள்ளனர்.

இதுபோன்று சென்சார் பல தடை விதித்து உள்ளது. இதனால் சென்சார் மீது எனக்கு கொஞ்சம் அதிருப்தி தான் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions