பைரவா படம் கத்தியை மிஞ்சும் – சதீஷ் நம்பிக்கை!

Bookmark and Share

பைரவா படம் கத்தியை மிஞ்சும் – சதீஷ் நம்பிக்கை!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டுமே படத்தில் பாக்கியிருப்பதாகவும் அதுவும் விரைவில் வெளிநாடுகளில் படமாகிவிடும் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் படம் அடுத்த ஆண்டு பொங்கலில் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படம் குறித்து பேசிய நகைச்சுவை நடிகர் சதீஷ், கத்தி படத்தை விட இதில் தனது காமெடி அதிகளவில் பேசப்படும் என கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions