ஆரம்பத்திலேயே பட்டைய கிளப்பும் ‘பைரவா’ விஜய்

Bookmark and Share

ஆரம்பத்திலேயே பட்டைய கிளப்பும் ‘பைரவா’ விஜய்

விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் ‘பைரவா’ படத்தில் நடித்து வருகிறார். பொதுவாக விஜய் நடிக்கும் படங்களில் அவரது அறிமுக பாடல் பெரியளவில் வரவேற்பு பெறும். அந்த வகையில் படக்குழுவினரும் விஜய்யின் அறிமுக பாடலை மிகவும் பிரம்மாண்டமாகவும், அதேநேரத்தில் அனைவரையும் கவரும் வகையிலும் படமாக்குவர்.

அதேபோல், விஜய் தற்போது நடித்து வரும் ‘பைரவா’ படத்திலும் விஜய்யின் அறிமுக பாடலையும் மிகவும் பிரம்மாண்டமாக படமாக்கியுள்ளார்களாம். சந்தோஷ் நாராயணன் இசையில் அமைந்துள்ள இப்பாடலில் முதல் வரி தற்போது வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், ‘பட்டைய கிளப்பு, பட்டைய கிளப்பு பட்டி தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பு’ என்று இந்த பாடல் தொடங்குகிறது.

அறிமுக பாடலில் பட்டைய கிளப்ப வரும் விஜய்க்கு, மொத்தம் இந்த படத்தில் 5 பாடல்கள் உள்ளன. இதில் அனைத்து பாடல்களையும் வைரமுத்துவே எழுதியுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் ஸ்டில்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இசைக்கு பெரிய எதிர்பார்ப்பு காத்திருக்கிறது. 

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சதிஷ், அபர்னா வினோத், டேனியல் பாலாஜி, ஜெகபதி பாபு, ஸ்ரீமன், ஒய்.ஜி.மகேந்திரன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.


Post your comment





Related News
அமெரிக்காவில் பைரவா படத்தை முந்திய விஜய் 61! தெறியை மிஞ்சுமா
பைரவா ரூ 100 கோடியை எட்டிவிட்டதா? வெளிவந்த உண்மைத்தகவல்
பைரவா சோதனையிலும் ஒரு சாதனை- 4வது படம் இது?
பைரவா படக்குழுவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்
விஜய்யின் ‘பைரவா’ பாடல் வெளியீட்டு விழா ரத்து
பைரவாவின் கோவை வியாபாரம் மட்டும் இத்தனை கோடியா?
பைரவாவில் விஜய்யின் ஃபேவரிட் என்ன தெரியுமா?
“அதென்ன ரோஸ் கலர்ல கோட்” பைரவா காஸ்டியூம் டிசைனர் விளக்கம்!
பைரவாவில் டவுள் ஹாட்ரிக்கை தாண்டிய விஜய்!
இன்று மாலை பைரவா ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் விருந்து!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions