ஒரு வரியில் கதை சொன்ன பாக்யராஜ்

Bookmark and Share

ஒரு வரியில் கதை சொன்ன பாக்யராஜ்

தமிழ்த் திரையுலகில் மிக முக்கியமான பட நிறுவனமாக விளங்கியது தேவர் பிலிம்ஸ் நிறுவனம். மிருகங்களை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைத்த நிறுவனமாகத்தான் பலருக்கு அவர்களைப் பற்றித் தெரியும்.

அந்த நிறுவனத்திற்கென்று தனிப்பட்ட கதை இலாகா ஒன்று உண்டு. அந்தக் காலத்தில் அவர்கள்தான் ஒரு படத்திற்கென்று கதைகளை உருவாக்குவார்கள். படத்தை இயக்க வரும் இயக்குனர்களும் தயாரிப்பாளரிடமும், அந்த கதை இலாகாவிடமும்தான் கதை சொல்ல வேண்டும்.

அதன் பிறகு அந்தக் கதையை மெருகேற்றி படமாகத் தயாரிப்பார்கள். பாக்யராஜ், பாரதிராஜாவிடம் உதவியாளராகச் சேர்வதற்கு முன் தூயவன் அவர்களிடமும் உதவியாளராக இருந்தவர்.

ஒரு முறை தேவர் பிலிம்ஸ்-ல் கதை சொல்வதற்காக பாக்யராஜ் சென்றாராம். அவர்களிடம் கதை சொல்ல வேண்டுமென்றால் மூன்று நிபந்தனைகளை விதிப்பார்களாம். ஒன்று கதையில் கடவுள் பக்தி இருக்க வேண்டும், இரண்டு பெண்கள் சென்டிமென்ட் இருக்க வேண்டும், மூன்று அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்க வேண்டும், இதுதான் அந்த மூன்று நிபந்தனைகள்.  

அவற்றைக் கேட்ட பாக்யராஜ், ஒரே வரியில் அந்த மூன்று நிபந்தனைகளும் இருக்கும்படியாக ஒரு கதையை சொன்னாராம். அது என்ன தெரியுமா...“ஐயோ கடவுளே...என்னை கற்பழிச்சது யாரோ...” என்பதுதான் அந்தக் கதையாம். இதில் 'கடவுளே' என்பதில் கடவுள் பக்தி இருக்கிறது, 'கற்பழிப்பு' என்பதில் பெண்கள் சென்டிமென்ட் இருக்கிறது, 'யாரோ' என்பதில் அடுத்து என்ன என்பதும் இருக்கிறது. இப்போது சொல்லுங்கள் பாக்யராஜ், ஒரு திரைக்கதை மன்னன்தானே... !


Post your comment





Related News
பாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது! மருமகள் கீர்த்தி
போக்குவரத்து போலீசாரின் அடாவடியால் வேதனைப்பட்ட சாந்தனு
காங்கிரஸுக்கு எதிராக எழுந்த வாய்மை- கொதிப்பில் காங்கிரஸ்!
கே.பாக்யராஜின் கதை விவாதம்!
தயாரிப்பாளர்களை மட்டமாக பேசுவதா? பவர்ஸ்டாருக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்த சிங்கம்புலி - சிவா!!
இளையராஜாவை டென்சன் செய்த பாக்யராஜ்!
பாரதிராஜா-பாக்யராஜை காப்பியடித்த பேரரசு!
சுப்பிரமணிய சாஸ்திரிகளாக நடிக்கும் பாக்யராஜ்
பாக்யராஜ் - பூர்ணிமா திருமணம் நடப்பதற்கு சுகாசினிதான் காரணமாம்!
லட்சிய நடிகர் என்ற பெயருக்கு ஏற்றபடியான கொள்கைகளை உடையவர் எஸ்.எஸ்.ஆர்: பாக்யராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions