படங்களை தேர்ந்தெடுக்கும் கலையை கற்றுக்கொண்டாராம் முக்தா பானு!

Bookmark and Share

படங்களை தேர்ந்தெடுக்கும் கலையை கற்றுக்கொண்டாராம் முக்தா பானு!

தமிழ், மலையாளம் இரண்டிலும் சரிசமமாக படங்களை வைத்திருக்கிறார் முக்தா பானு.. தாமிரபரணி பானு என்று சொன்னால் உங்களுக்கு சட்டென புரியும்.. தமிழில் எம்.ராஜேஸ் இயக்கும் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்து வரும் பானு, மலையாளத்திலும் கைவசம் நான்கு படங்களை வைத்திருக்கிறார்.. அதில் முக்கியமான படமாக அவர் கருதுவது சுகமாயிருக்கட்டே என்கிற படத்தைத்தான்.. தந்தை-மகள் பாசப்பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் கல்லூரி செல்லும் பெண்ணாக நடிக்கிறார் பானு..  

ஒன்பது வருடங்களுக்கு முன்பு, அதாவது அவர் சினிமாவில் அறிமுகமான புதிதில் அச்சனுறங்காத வீடு படத்தில் நடித்தபோது ஏற்பட்ட நெகிழ்ச்சியான உணர்வு இந்தப்படத்தில் நடித்தபோது அவருக்கு ஏற்பட்டதாம். இதுதவிர யூ டூ புரூட்டஸ் என்கிற படத்தில் கொஞ்ச நேரமே வரும் டான்ஸ் டீச்சர் ரோலில் நடித்திருக்கிறாராம். படங்களை எப்படி தேர்வு செய்வது என்கிற கலையை கற்றுகொண்டதால் இனி சரியான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்கிறார் பானு.


Post your comment





Related News
நடிகைகள் பானுப்பிரியா, சரண்யாவுடன் போட்டி போடும் ஜோதிகா
ஆகஸ்ட் 30 ல் தாமிரபரணி பானு திருமணம்
அழகு சிகிச்சையில் இறங்கிய தாமிரபரணி பானு!
தமிழில் அறிமுகமாகும் நடிகை பானுஸ்ரீ மெஹ்ரா
ஹீரோயினாக நடிப்பதால் மட்டுமே பெயர் கிடைத்துவிடாது” குணச்சித்திர பானுவின் விளக்கம்
புதுமுக ஹீரோக்களுடன் நடிக்க மறுத்த தாமிரபரணி பானு!
சஸ்பென்சை உடைத்த பானு!
மேக்கப்வுமன் பானுவுக்கு லிங்கா படத்தில் ஒருநாள் சம்பளம் 65 ஆயிரம்
பானுவுக்கு அறுவை சிகிச்சை
பழம்பெரும் நடிகை எம்.பானுமதி காலமானார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions