புதுமுக ஹீரோக்களுடன் நடிக்க மறுத்த தாமிரபரணி பானு!

Bookmark and Share

புதுமுக ஹீரோக்களுடன் நடிக்க மறுத்த தாமிரபரணி பானு!

தாமிரபரணி, அழகர் மலை, சட்டப்படி குற்றம், மூன்று பேர் மூன்று காதல் என பல படங்களில் நடித்தவர் பானு. ஹரி இயக்கிய ஐயா படத்துக்குப்பிறகு நயன்தாரா பிரபலமானதைப் போன்று, தாமிரபரணிக்கு பிறகு இவரும் பிரபலமாகி விடுவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதையடுத்து அழகர் மலை என்ற படத்தில் நடித்த பானு, திடீரென்று காணாமல் போய் விட்டார். சில ஆண்டு இடைவெளிக்குப்பிறகு மீண்டும் தமிழில் நடிக்கத் தொடங்கிய அவருக்கு முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

மாறாக, புதுமுக ஹீரோக்களின் படங்களாக சென்றதால், எந்த படத்தையும் ஏற்காமல் தட்டிக்கழித்து வந்த பானு, பின்னர் படமே இல்லாமல் போனதால், இப்போது வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, பாம்பு சட்டை போன்ற படங்களில் கேரக்டர் நடிகையாகியிருக்கிறார்.

இந்த நிலையில், இப்போது தன்னை முழுநேர கேரக்டர் நடிகையாக்கி விடுவார்கள் போலிருக்கே என்று பயப்படும் பானு, புதுமுக ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் நடித்து தனது ஹீரோயின் இமேஜை காப்பாற்றிக்கொள்ளலாம் என்று ஆசைப்படுகிறார். ஆனால் அவரை நம்பி ஹீரோயினி சான்ஸ் கொடுக்கத்தான் ஆளில்லையாம்.


Post your comment





Related News
நடிகைகள் பானுப்பிரியா, சரண்யாவுடன் போட்டி போடும் ஜோதிகா
ஆகஸ்ட் 30 ல் தாமிரபரணி பானு திருமணம்
அழகு சிகிச்சையில் இறங்கிய தாமிரபரணி பானு!
தமிழில் அறிமுகமாகும் நடிகை பானுஸ்ரீ மெஹ்ரா
ஹீரோயினாக நடிப்பதால் மட்டுமே பெயர் கிடைத்துவிடாது” குணச்சித்திர பானுவின் விளக்கம்
சஸ்பென்சை உடைத்த பானு!
படங்களை தேர்ந்தெடுக்கும் கலையை கற்றுக்கொண்டாராம் முக்தா பானு!
மேக்கப்வுமன் பானுவுக்கு லிங்கா படத்தில் ஒருநாள் சம்பளம் 65 ஆயிரம்
பானுவுக்கு அறுவை சிகிச்சை
பழம்பெரும் நடிகை எம்.பானுமதி காலமானார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions