ஹீரோயினாக நடிப்பதால் மட்டுமே பெயர் கிடைத்துவிடாது” குணச்சித்திர பானுவின் விளக்கம்

Bookmark and Share

ஹீரோயினாக நடிப்பதால் மட்டுமே பெயர் கிடைத்துவிடாது” குணச்சித்திர பானுவின் விளக்கம்

தாமிரபரணி பானு தனி கதாநாயகியாக நடித்த காலம் மலையேறிவிட்டது. அதனால் இப்போது தன்னை தேடிவரும் நல்ல வாய்ப்புகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.

தமிழில் அவர் நடித்துவரும் சகுந்தலாவின் காதலன் படத்தில் கதாநாயகி சகுந்தலா கேரக்டரில் இவர் தான் நடிக்கிறார் என்றாலும் படத்தில் மற்றவர்களை போல அவருக்கும் அது ஒரு கதாபாத்திரம் மட்டும் தானாம்.

ஹீரோயினாக நடிப்பதால் மட்டுமே பெயர் வந்துவிடாது என்பதை மலையாளத்தில் இம்மானுவேல் படத்தில் நடித்தபோதுதான் புரிந்துகொண்டாராம் பானு. “அந்தப்படத்தில் கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண்ணாக மூன்று,

நான்கு காட்சிகளில் மட்டுமே நடித்தேன்.. முடி எல்லாம் கொட்டிப்போய்  கிட்டத்தட்ட மொட்டைத்தலை கெட்டப்புடன் நடித்திருந்தேன். ஆனால் அந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்தவரை விட எனது கேரக்டர்தான் அனைவரிடமும் பாராட்டை பெற்றது.

அதனால் ஹீரோயின் அல்லது குணச்சித்திர நடிகை என எதுவானாலும் எனக்கு ஓகே தான்” என்கிறார் பானு. சினிமாவின் சூட்சுமத்தை பானு கற்றுக்கொண்டார் என்றே தெரிகிறது.  

 


Post your comment





Related News
நடிகைகள் பானுப்பிரியா, சரண்யாவுடன் போட்டி போடும் ஜோதிகா
ஆகஸ்ட் 30 ல் தாமிரபரணி பானு திருமணம்
அழகு சிகிச்சையில் இறங்கிய தாமிரபரணி பானு!
தமிழில் அறிமுகமாகும் நடிகை பானுஸ்ரீ மெஹ்ரா
புதுமுக ஹீரோக்களுடன் நடிக்க மறுத்த தாமிரபரணி பானு!
சஸ்பென்சை உடைத்த பானு!
படங்களை தேர்ந்தெடுக்கும் கலையை கற்றுக்கொண்டாராம் முக்தா பானு!
மேக்கப்வுமன் பானுவுக்கு லிங்கா படத்தில் ஒருநாள் சம்பளம் 65 ஆயிரம்
பானுவுக்கு அறுவை சிகிச்சை
பழம்பெரும் நடிகை எம்.பானுமதி காலமானார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions