அழகு சிகிச்சையில் இறங்கிய தாமிரபரணி பானு!

Bookmark and Share

அழகு சிகிச்சையில் இறங்கிய தாமிரபரணி பானு!

ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த படம் தாமிரபரணி. இந்த படத்திற்காக கேரளாவில் இருந்து தமிழுக்கு இறக்குமதியானவர் பானு. அதற்கு முன்பு சரத்குமார் நடித்த ஐயா படத்துக்காக நயன்தாராவை தமிழுக்கு கொண்டு வந்தவரும் அவரே.

அதனால் இந்த படத்திற்கு பானு கமிட்டானபோது அடுத்த நயன்தாரா என்கிற அளவுக்கு பேசப்பட்டார். ஆனால் அவருக்கு தமிழில் பிரகாசமான எதிர்காலம் அமையவில்லை.

அதனால் சில சின்ன படங்களில் மட்டுமே நடித்து வந்தார் பானு. தற்போது அவரது மார்க்கெட் பெரிதாக இல்லாத நிலையிலும் சில படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில், கதாநாயகி வேடம்தான் வேண்டும் என்று யாரிடமும் அடம்பிக்காத பானு, வித்தியாசமான பர்பார்மென்ஸ் வேடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.

அதேசமயம் தனது கதாநாயகி மார்க்கெட்டை மீண்டும் பிடிக்கும் முயற்சியாக தற்போது உடல் அழகை மெருகேற்றும் வேலைகளில் இறங்கியுள்ளார் பானு. காரணம், அவரிடமிருந்த வசீகரமான தோற்றம் தற்போது சற்று காணாமல்போயிருப்பதாக அவரது அபிமானத்திற்குரிய சில டைரக்டர்கள் சொன்னார்களாம்

அதோடு மீண்டும் பழைய புதுப்பொலிவான அழகை கொண்டு வந்து விட்டால் கதாநாயகி வேடம் தருவதாகவும் உறுதிமொழி வழங்கி விட்டார்களாம். அதனால் சமீபகாலமாக ஆயுர்வேத சிகிச்சைகளில் ஈடுபடும் பானு, தனது முகத்திலும் எந்த நேரமும் ஏதாவது மூலிகை வாசணை பொருட்களை பூசியபடியே காட்சி தருகிறார்.


Post your comment





Related News
நடிகைகள் பானுப்பிரியா, சரண்யாவுடன் போட்டி போடும் ஜோதிகா
ஆகஸ்ட் 30 ல் தாமிரபரணி பானு திருமணம்
தமிழில் அறிமுகமாகும் நடிகை பானுஸ்ரீ மெஹ்ரா
ஹீரோயினாக நடிப்பதால் மட்டுமே பெயர் கிடைத்துவிடாது” குணச்சித்திர பானுவின் விளக்கம்
புதுமுக ஹீரோக்களுடன் நடிக்க மறுத்த தாமிரபரணி பானு!
சஸ்பென்சை உடைத்த பானு!
படங்களை தேர்ந்தெடுக்கும் கலையை கற்றுக்கொண்டாராம் முக்தா பானு!
மேக்கப்வுமன் பானுவுக்கு லிங்கா படத்தில் ஒருநாள் சம்பளம் 65 ஆயிரம்
பானுவுக்கு அறுவை சிகிச்சை
பழம்பெரும் நடிகை எம்.பானுமதி காலமானார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions