தமிழில் அறிமுகமாகும் நடிகை பானுஸ்ரீ மெஹ்ரா

Bookmark and Share

தமிழில் அறிமுகமாகும் நடிகை பானுஸ்ரீ மெஹ்ரா

அழகான, அட்டகாசமான பல திறமையான நடிகைகளை தந்த பஞ்சாபிலிருந்து மேலும் ஒரு அழகி தமிழில் அறிமுகம் ஆகிறார். வருடு என்ற தெலுங்கு படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த பானுஸ்ரீ, தமிழில் தனது முதல் படத்தில் பரத் உடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். 

தனது சினிமா பிரவேசத்தை பற்றி பானுஸ்ரீ மெஹ்ரா கூறும்பொழுது “தெஹ்ராதூணில் மேல்நிலை கல்வியை முடித்து மும்பையில் மாஸ் மீடியா பட்டபடிப்பு மேற்கொண்டு வந்த நேரத்தில் மாடலிங் ஆரம்பித்தேன். பின் பல விளம்பரங்களில் நடித்தேன். இதன்மூலகமாவே வருடு படத்தில் வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திற்கு பின் எனது தாய் மொழியான பஞ்சாபியில் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறேன். தற்பொழுது தமிழில் அறிமுகமாவது மகிழ்ச்சியாகவுள்ளது.

இப்படத்தில் நான் ஒரு செய்தி வாசிப்பாளராக, மிகவும் தைரியாமான பெண்ணாக வருகிறேன். விரைவில் ஷூட்டிங் ஆரம்பமாக உள்ளது. பிரபல பெண் பத்திரிக்கையாளர் பர்க்கா தத்தை எனது ரோல் மாடலாக எடுத்து நடிக்கிறேன். இன்றைய பத்திரிகைத் துறையில் வேலை செய்யும் அனைத்து மகளிருக்கும் எனது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் என்கிறார் பானுஸ்ரீ மெஹ்ரா.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions