ஆர்யாவைத் தொடர்ந்து அகோரியாக நடிக்கிறார் பரத்!

Bookmark and Share

ஆர்யாவைத் தொடர்ந்து அகோரியாக நடிக்கிறார் பரத்!

2009-ல் பாலா இயக்கத்தில் ஆர்யா நடித்த படம் நான் கடவுள். இந்த படத்தில் அகோரி வேடத்தில் நடித்திருந்தார் ஆர்யா. அதுவரை சாக்லேட் ஹீரோவாக நடித்து வந்த ஆர்யாவின் இமேஜ் அந்த படத்திலிருந்துதான் மாறியது.

அவரைத் தொடர்ந்து இப்போது அருண் கிருஷ்ணசாமி இயக்கத்தில் என்னோடு விளையாடு எனற் படத்தில் நடித்து வரும் பரத்தும், அடுத்தபடியாக சிம்பா என்றொரு படத்தில் அகோரியாக நடிக்கிறார். குட்டே இண்டர் நேசனல் தமிழ்ச்செல்வன் தயாரிக்கும் அப்படத்தை சில குறும் படங்களை இயக்கிய அரவிந்த் கே.ஸ்ரீதர் இயக்குகிறார்.

இப்படத்தில் ஆறறிவு இருக்குபோது ஒருவிதமாகவும், ஐந்தறிவு மனிதனாகும்போது இன்னொரு மாதிரியாகவும் இரண்டுவிதமான மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தும் பரத் அகோரி கெட்டப்பில் தோன்றுகிறாராம்.

இந்த சிம்பா படத்தில் பரத்துக்கு ஜோடியாக பானு மெஹரா, சுவாதி தீட்சித் என்ற இரண்டு நடிகைகள் நடிக்கிறார்கள். காதல் படத்திற்கு பிறகு இந்த படம் தனக்கு பெரிய திருப்புமுனை ஏற்படுத்தும் என்று பரத் எதிர்பார்க்கிறாராம். இம்மாதம் 12-ந்தேதியில் இருந்து பாண்டிச்சேரியில் சிம்பா படப்பிடிப்பு தொடங்குகிறது


Post your comment





Related News
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
என் கதாநாயகிகள் கறுப்பாக தான் இருக்க வேண்டும் - பாரதிராஜா
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை
இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
டாக்டராக ஆசைப்பட்டு டான்ஸ் மாஸ்டரான நடன இயக்குனர் பாரதி.!
நானும் ஆன்மீகவாதி தான் பாரதிராஜா பரபரப்பான பேச்சு.
தீரன்" வெளியிட்ட "காளிதாஸ்
அடேங்கப்பா போக்கிரி குண்டு பையனா இது? - வியக்க வைக்கும் புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions