மீண்டும் ஆக்ஷன் படத்தில் நடிக்கிறார் பரத்

Bookmark and Share

மீண்டும் ஆக்ஷன் படத்தில் நடிக்கிறார் பரத்

நெக்ஸ்ட் டோர் பாயாக இருந்த பரத் திடீரென பழனி, கில்லாடி, ஆறுமுகம் என ஆக்ஷன் அவதாரம் எடுத்தார். அதனால் எதுவும் நடக்கவில்லை. தனக்கு பெயர் சொல்கிற மாதிரி ஒரு  படம் அமைய வேண்டும் என்று சசி இயக்கத்தில் 555 படத்தில் நடித்தார். இதற்காக சிக்ஸ் பேக்ஸ் வைத்தார்.

அதுவும் அவர் எதிர்பார்த்த அளவு போகவில்லை. அதன் பிறகு சித்த வைத்திய சிகாமணி என்று காமெடி களத்தில் குதித்தார். அதுவும் வேலைக்கு ஆகவில்லை. அடுத்து என்ன செய்வது, என்ன மாதிரியான படத்தில் நடிப்பது என்ற தயக்கத்தில் இருந்தார் பரத், அதிரடி ஆக்ஷனாக இல்லாமல் யதார்த்தமான ஆக்ஷன் படத்தில் நடிப்பது என்று முடிவு செய்து தற்போது பூபதி பாண்டியன் உதவியாளர் கிருஷ்ணசாமி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இதனை ரேயான் ஸ்டூடியோ சார்பில் கே.கீதா தயாரிக்கிறார். படத்தின் டைட்டில் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. முன்னணி ஹீரோயின் ஒருவர் நடிக்க பேச்சு நடந்து வருகிறது. ஏப்ரலில் இருந்து ஷூட்டிங் கிளம்புகிறார் பரத்.


Post your comment





Related News
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
என் கதாநாயகிகள் கறுப்பாக தான் இருக்க வேண்டும் - பாரதிராஜா
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை
இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
டாக்டராக ஆசைப்பட்டு டான்ஸ் மாஸ்டரான நடன இயக்குனர் பாரதி.!
நானும் ஆன்மீகவாதி தான் பாரதிராஜா பரபரப்பான பேச்சு.
தீரன்" வெளியிட்ட "காளிதாஸ்
அடேங்கப்பா போக்கிரி குண்டு பையனா இது? - வியக்க வைக்கும் புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions