“ பொட்டு “ பேய் படத்தில் நடிக்கும் பரத்!

Bookmark and Share

“ பொட்டு “ பேய் படத்தில் நடிக்கும் பரத்!

மாபெரும் வெற்றி பெற்ற மைனா, சாட்டை , மொசக்குட்டி போன்ற படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும்   இணைந்து தயாரித்திருக்கும்  “ சவுகார்பேட்டை “ படம் இம்மாதம் வெளியாகிறது.

ஸ்ரீகாந்த் – ராய்லட்சுமி நடித்திருக்கும் சவுகார்பேட்டை  படம் எல்லா ஏரியாவும் விற்று தீர்ந்து விட்டது. படத்தின் தரம் உயர்வாக வந்துள்ளதாலும், வியாபாரம் திருப்திகரமாக நடந்துள்ளதால் தயாரிப்பாளர்கள் ஜான்மேக்ஸ் – ஜோன்ஸ் இருவரும் இயக்குனர் வடிவுடையானுக்கு புதிய கார் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளனர்.

அத்துடன் அடுத்த படமான பொட்டுவையும் வடிவுடையான் இயக்கத்திலேயே தயாரிக் கிறார்கள். “ பொட்டு “ படத்தில் நாயகனாக பரத் நடிக்கிறார். கதாநாயகியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்கிறார். மற்றும் சரவணன், கருணாஸ், சுமன், சிங்கம்புலி, ஊர்வசி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் துவங்குகிறது. சவுகார்பேட்டை போன்றே இதுவும் திகில் கலந்த பேய் கதையாக உருவாகிறது. மெடிக்கல் காலேஜ் பின்னணியில் பேய்க்கதையை திரைக்கதையாக அமைத்திருக்கிறோம் என்றார் வடிவுடையான்.    


Post your comment





Related News
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
என் கதாநாயகிகள் கறுப்பாக தான் இருக்க வேண்டும் - பாரதிராஜா
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை
இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
டாக்டராக ஆசைப்பட்டு டான்ஸ் மாஸ்டரான நடன இயக்குனர் பாரதி.!
நானும் ஆன்மீகவாதி தான் பாரதிராஜா பரபரப்பான பேச்சு.
தீரன்" வெளியிட்ட "காளிதாஸ்
அடேங்கப்பா போக்கிரி குண்டு பையனா இது? - வியக்க வைக்கும் புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions