பரத்துக்கு ஜோடியாக அறிமுகமாகும் பஞ்சாபி பெண்

Bookmark and Share

பரத்துக்கு ஜோடியாக அறிமுகமாகும் பஞ்சாபி பெண்

பரத் தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில் பரத்துக்கு ஜோடியாக பஞ்சாபி பெண்ணான பானுஸ்ரீ மெஹ்ரா நடிக்கிறர். இவர் ஏற்கனவே தெலுங்கில் ‘வருடு’ படத்தில் நடித்திருக்கிறார். தற்போது பரத் உடன் இணைவதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

இது குறித்து பானுஸ்ரீ கூறும்போது, தெஹ்ராதூணில் மேல்நிலை கல்வியை முடித்து மும்பையில் மாஸ் மீடியா பட்டபடிப்பு மேற்கொண்டு வந்த நேரத்தில் மாடலிங் ஆரம்பித்தேன். பின்னர் பல விளம்பரங்களில் நடித்து வந்தேன். இதன் மூலகமாவே ‘வருடு’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

முதல் படத்திற்கு பின் தாய் மொழியான பஞ்சாபியில் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறேன். தற்பொழுது தமிழில் அறிமுகமாவது மகிழ்ச்சியாகவுள்ளது. இப்படத்தில் நான் ஒரு செய்தி வாசிப்பாளராக வருகிறேன். மிகவும் தைரியமான பெண்ணாக வருகிறேன். படப்பிடிப்பு வேலைகள் விரைவில் தொடங்கவுள்ளது.

பிரபல பெண் பத்திரிக்கையாளர் பர்க்கா தத் எனது ரோல் மாடலாக எடுத்து நடிக்கிறேன். இன்றைய பத்திரிக்கைதுறையில் வேலை செய்யும் அனைத்து மகளிருக்கும் எனது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். எனக் கூறினார். 


Post your comment





Related News
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
என் கதாநாயகிகள் கறுப்பாக தான் இருக்க வேண்டும் - பாரதிராஜா
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை
இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
டாக்டராக ஆசைப்பட்டு டான்ஸ் மாஸ்டரான நடன இயக்குனர் பாரதி.!
நானும் ஆன்மீகவாதி தான் பாரதிராஜா பரபரப்பான பேச்சு.
தீரன்" வெளியிட்ட "காளிதாஸ்
அடேங்கப்பா போக்கிரி குண்டு பையனா இது? - வியக்க வைக்கும் புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions