பரத்தை மலையாளத்திற்கு இழுக்கும் '1000 ; 7000' நம்பர் பிசினஸ்..!

Bookmark and Share

பரத்தை மலையாளத்திற்கு இழுக்கும் '1000 ; 7000' நம்பர் பிசினஸ்..!

நடிகர் பரத்துக்கும் மலையாள சினிமாவுக்கும் 11 வருட கால பந்தம் இப்போதும் விடாமல் தொடர்கிறது.  இதுதவிர கடந்த 2014லேயே பரத் '4 ஸ்டூடண்ட்ஸ்' என்ற மலையாளப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் அடுத்ததாக மோகன்லாலுடன் இணைந்து பரத் நடித்த 'கூதரா' என்கிற படம் கடந்த மே மாதம் தான் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பரத் மலையாளத்திற்கு வருவதற்கு காரணங்கள் ஆயிரம் இருந்தாலும் இப்போது '1௦௦௦' மும் ஒரு காரணமாக அமைந்திருக்கிறது. ஆம்.. மலையாளத்தில் தற்போது லேட்டஸ்ட்டாக பரத் நடித்துவரும் படங்களும் ஆயிரங்களையே டைட்டிலாக கொண்டுள்ளது தான் ஆச்சர்யமான விஷயம்.

அதில் ஒரு படத்தின் பெயர்தான் '1௦௦௦ - ஒரு நோட்டு பறஞ்ச கத'. அதாவது ஆயிரம் ரூபாய் நோட்டை மையப்படுத்தி இந்தப்படத்தின் கதை பின்னப்பட்டுள்ளதாம். ஏ.ஆர்.சி.நாயர் இயக்கத்தில் சஸ்பென்ஸ் படமாக உருவானாலும் படத்தில் காமெடியும் பிரதானமாக இருக்குமாம்.

பரத்துடன் மக்பூல் சல்மான், பியான் என இன்னும் இரண்டு ஹீரோக்களும் நடிக்கிறார்கள். இதுதவிர அனில் ராதாகிருஷ்ணன் மேனன் இயக்கும் 'லார்ட் லிவிங்ஸ்டோன் 7௦௦௦ கண்டி' என்கிற படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் பரத்.

இந்தப்படத்தின் கதாநாயகனாக நடிப்பவர் குஞ்சாக்கோ போபன். இன்னொரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் சன்னி வெய்ன். இவரும் பரத்தும் ஏற்கனவே 'கூதரா' என்கிற படத்தில் இணைந்து நடித்தவர்கள் தான்.

இந்தப்படத்தில் முதலில் ஷாம் நடிப்பதாக சொல்லப்பட்ட கேரக்டரில் தான் இப்போது பரத் நடிக்க இருக்கிறார் என்று தெரிகிறது. 

 


Post your comment





Related News
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
என் கதாநாயகிகள் கறுப்பாக தான் இருக்க வேண்டும் - பாரதிராஜா
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை
இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
டாக்டராக ஆசைப்பட்டு டான்ஸ் மாஸ்டரான நடன இயக்குனர் பாரதி.!
நானும் ஆன்மீகவாதி தான் பாரதிராஜா பரபரப்பான பேச்சு.
தீரன்" வெளியிட்ட "காளிதாஸ்
அடேங்கப்பா போக்கிரி குண்டு பையனா இது? - வியக்க வைக்கும் புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions