பரத் ஜோடியானர் சாந்தினி

Bookmark and Share

பரத் ஜோடியானர் சாந்தினி

சித்து பிளஸ் 2 படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் சாந்தினி. முதல் படத்துக்கு பிறகு போதிய வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு பக்கம் போனார். அங்கு காளிச்ரன், லவ்வர்ஸ், கிராக் படங்களில் நடித்தார்.

இரண்டாவதாக நடித்த படித்துறை படம் வெளிவரவில்லை. மீண்டும் தமிழில் நான் ராஜாவாக போகிறேன் படத்தில் நடித்தார். அதன் பிறகும் வாய்ப்பு வராததால் மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார்.

என்றாலும் விடா முயற்சியின் பயனாக இப்போது மூன்று தமிழ் டங்களில் ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டிருக்கிறார். இயக்குனர் சுசீந்திரன் தயாரிப்பில் அவரது உதவியாளர் ரமேஷ் சுப்பிரமணியன் இயக்கும் வில்அம்பு படத்தில் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

வெப்பம் படத்தை இயக்கிய அஞ்சனா இயக்கும் பல்லாண்டு வாழ்க படத்தில் ராகுல் ரவீந்திரன் ஜோடியாக நடிக்கிறார். இதுதவிர தற்போது பரத் ஹீரோவாக நடிக்கும் என்னோடு விளையாடு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அருண் என்ற புதுமுகம் இயக்குகிறார்.

இது த்ரில்லர் படம். பரத் நடிக்கும் முதல் த்ரில்லர் படம் இதுதான். இந்த மூன்று படங்களும் தமிழில் தனக்கு நிலையான இடத்தை பெற்றுத் தரும் என்று சாந்தினி நம்புகிறார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions