
பரத், கதிர் இணைந்து நடித்துள்ள படம் ‘என்னோடு விளையாடு’. டொரண்டோ ரீல்ஸ், ரேயான் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அருண் கிருஷ்ணசாமி இயக்கியுள்ளார். இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
இதில் பேசிய பரத்...
“ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு நான் நடிக்க ஒப்புக்கொண்டபடம் இது. கதையை இயக்குநர் என்னிடம் விவரித்தபோது இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. என்னுடைய பதினான்கு ஆண்டு கால திரையுலகில் குதிரை பந்தயம், குதிரை பந்தய சூதாட்டம் என்ற பின்னணியை வைத்து ஒரு முழுத்திரைக்கதையை நான் தமிழ் சினிமாவில் பார்த்ததில்லை. அந்த வகையில் இந்த திரில்லர் படம் புதிதாக இருக்கும். இப்படம் என்னுடைய திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன்.
ஒரு படத்தின் வெற்றியை ரசிகர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த ரொமாண்டிக் திரில்லர் படம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும். இந்த படம் வெற்றி பெறும்.
என்னுடைய திரையுலக பயணத்தில் நான் விஷால், பசுபதி, சிம்பு, ஆர்யா ஆகியோருடன் இணைந்து நடித்திருக்கிறேன். இந்த படத்தில் கதிர் உடன் நடித்திருக்கிறேன்.
அதே போல் படத்தில் நல்ல தமிழ் பேசும் நடிகை சாந்தினி உடன் பணியாற்றியதும் மறக்க இயலாதது.
இந்த படத்தில் ஒரு மெசேஜும் இருக்கிறது. குதிரைப் பந்தய சூதாட்டத்தில் யாரும் ஈடுபடக்கூடாது. அது என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்பதை இந்த படம் சொல்கிறது.” என்றார்.
நிகழ்ச்சியில் கதிர், இயக்குனர் அருண் கிருஷ்ணசாமி, தயாரிப்பாளர்கள் ஸ்ரீதர் கிருஷ்ணசாமி, நரேன் கந்தசாமி, நாயகிகள் சாந்தினி, சஞ்சிதா ஷெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Post your comment