’நண்டு’ படத்தின் மூலம் மீண்டும் இணையும் ’பரத்-தமன்னா’

Bookmark and Share

’நண்டு’ படத்தின் மூலம் மீண்டும் இணையும் ’பரத்-தமன்னா’

ஆசாமி, இன்னாருக்கு இன்னாரென்று ஆகிய படங்களை இயக்கியவர் ஆண்டாள் ரமேஷ். இவர் தனது மூன்றாவது படமாக நண்டு என் ப்ரண்டு என்ற படத்தை இயக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார்.

கார்த்திக்ராஜா இசையமைக்கும் இப்படத்தை நாகராஜ் தயாரிக்கிறார். கண்டேன் காதலை படத்திற்கு பிறகு பரத்-தமன்னா இருவரும் மீண்டும் இப்படத்தில் இணைகின்றனர்.

இப்படம் பற்றி இயக்குனர் ஆண்டாள் ரமேஷ் கூறும்போது,

இந்த படத்தில் ஒரு நண்டு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. அதாவது கல்லூரியில் படிக்கும் கதாநாயகி ஒரு ஆராய்ச்சிக்காக கடற்கரை பகுதிக்கு செல்லும்போது, ஒரு நண்டுக்கு உதவி செய்கிறாள். அதையடுத்து அந்த நண்டு அவளுடன் நட்பாகி விடுகிறது.

பின்னர், அவள் கடற்கரைக்கு செல்லும்போதெல்லாம் அந்த நண்டு அவளுடன் விளையாடுகிறது. ஆனால் தனது காதலி அந்த நண்டிடம் அதிகமாக பழகுவதை பார்க்கும் நாயகன் அதன் மீது ஈகோ கொள்கிறான்.

அதனால் அந்த நண்டை கொன்று விட வேண்டும் என்று அவன் திட்டமிடுகிறான்.. இந்த சூழ்நிலையில், கதாநாயகி இறந்து விடுகிறாள். இதையடுத்து தனது காதலியின் சாவுக்கு காரணமான அந்த சமூகவிரோதிகளை கோர்ட்டில் நிறுத்துகிறான் நாயகன்.

ஆனபோதும் அவர்கள் குற்றமற்றவர்களாக நிரூபித்துக்கொண்டு வெளியே வந்து விடுகிறார்கள். அதோடு, ஹீரோவை காலி பண்ண வரிந்து கட்டுகின்றனர். அந்த சமயத்தில் நண்டுவின் உடம்புக்குள் இருக்கும் ஹீரோயினி நண்டு உருவத்தில் வந்து அவர்களிடமிருந்து ஹீரோவை காப்பாற்றி, அந்த சமூக விரோதிகளை அழிப்பதுதான் இந்த படத்தின் கதை என்கிறார்.

ஆக, நண்டு இந்த படத்தின் பிரதான கதாபாத்திரமாக நடிப்பதோடு, அது வில்லன்களை பழிவாங்கும் காட்சிகள் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக படமாக்கப்பட உள்ளது. மேலும், சூரி, சிங்கமுத்து, சரண்யா என பல முன்னணி கலைஞர்களும் நடிக்கும் இப்படம் பிரமாண்டமாகவும், கலகலப்பாகவும் படமாக்கப்பட உள்ளது என்கிறார் ஆண்டாள் ரமேஷ். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions