பைரவா ஷூட்டிங்கில் இப்படியும் சில விசயங்கள் ? இயக்குனர் பரதன்

Bookmark and Share

பைரவா ஷூட்டிங்கில் இப்படியும் சில விசயங்கள் ? இயக்குனர் பரதன்

பைரவா படம் விரைவில் வெளியாகி போகிறது. இப்போதே டிக்கெட் வாங்கிய மகிழ்ச்சியில் சில ரசிகர்கள் அதன் புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் போட்டு மகிழ்ச்சியுடன் ஷேர் செய்து வருகின்றனர்.

இப்போது இயக்குனர் பரதன் அளித்த பேட்டியில் :-

விஜய் சார் பைரவா படத்தின் கதையை சொன்னதுமே ஓகே பண்ணிடலாம் நா என்று சொல்லிவிட்டார். படப்பிடிப்பு துவங்குவதிலிருந்து முடியும் வரை ஆர்வாமாய் இருந்தார். படத்தின் டயலாக்குகள் போல சொன்ன வாக்கை காப்பாற்றுவதில் தீவிரமாய் இருந்தார்.

படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது, டப்பிங் துவங்குவதற்கு முன் வழக்கம் போல படத்தை பார்க்கட்டுமே என கேட்டு முதல் பாதி மட்டும் பார்த்தார்.

பின் அடுத்தநாள் உடனே டப்பிங் கொடுத்த அவர் 2 வது பாதியை பார்க்கவில்லை. நேரடியாக டப்பிங் போலாம் என்று முடிவித்துவிட்டார்.

அவர் அப்படி சொல்லும் பொது எங்க மீதிருந்த அவரின் நம்பிக்கை தான் தெரிந்தது. பஞ்ச் வசனங்கள் எல்லாம் மெனக்கிட்டு எழுதியிருக்கிறோம்.

ஒவ்வொன்றையும் எல்லாருடனும் ஆலோசித்து ரசிகர்களுக்கு பிடிக்கும்படி அமைத்துள்ளோம். இது அரசியல் படம் அல்ல.

வெறும் கவர்ச்சிக்காக ஹீரோயினை பயன்படுத்த எனக்கு பிடிக்கவில்லை. இதில் மலர்விழியாக நடிக்கும் கீர்த்தியை எப்படி ஆபத்தில் இருந்து விஜய் மீட்கிறார் என்பது கதை.

அவரின் திறம் தனியே தெரியும் வகையில் படம் உள்ளது, விஜய் படங்களுக்கு இருக்கும் வரவேற்பை வைத்து, விநியோகஸ்தர்களும் சொன்னதை வைத்து வசங்கள் அமைத்திருக்கிறோம் என அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions