குற்றப்பரம்பரை படத்தை இயக்கும் பாரதிராஜா

Bookmark and Share

குற்றப்பரம்பரை படத்தை இயக்கும் பாரதிராஜா

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தென் தமிழகத்தின் குறிப்பிட்ட சில பகுதியைச் சேர்ந்த மக்கள் திருட்டையே தொழிலாக கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.

அவர்களை ‘குற்றப்பரம்பரை’ என அப்போதைய பிரிட்டிஷ் அரசு வகைப்படுத்தியது.  இதனால், அந்த பகுதியிலுள்ள ஆண்கள் எல்லோரும் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிலை உருவானது. அதிக ஆண்டுகள் நீடித்த இந்த நிலையை பெரிய போராட்டங்களுக்கு பிறகு மாற்றினார்கள். 

இந்த வரலாற்று பின்னணியை மையமாக வைத்து ‘குற்றப்பரம்பரை’ என்கிற படத்தை இயக்க பாரதிராஜா சில ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருந்தார். இதற்கிடையில், இயக்குனர் பாலா இந்த படத்தை எடுக்கவுள்ளதாக செய்திகள் பரவியது.

இதனால், இப்படத்தை யார் இயக்குவது என்பதில் போட்டி ஏற்பட்டது. பாலா தரப்பில் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி என்பவரும், பாரதிராஜா தரப்பில் எழுத்தாளர் ரத்னகுமாரும் கருத்துக்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், பாரதிராஜாவும், பாலாவும் இதுகுறித்து எந்த கருத்தும் கூறவில்லை.

இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜா இப்படத்தை உடனடியாக தொடங்க திட்டமிட்டுள்ளார். அதன்படி, உசிலம்பட்டி அருகிலுள்ள பெருஙகாமநல்லூர் என்ற இடத்தில் இப்படத்தின் பூஜை மற்றும் படத்தொடக்கவிழா நடைபெற இருக்கிறது.

இந்த விழாவில் இயக்குனர் லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், சுசீந்திரன், பாண்டியராஜன், பொன்ராம, எழில், எஸ்.எஸ்.ஸ்டான்லி, சரவண சுப்பையா, மகிழ் திருமேனி, ஒளிப்பதிவாளர் கண்ணன், பாடலாசிரியர்கள் நா.முத்துக்குமார், கபிலன் வைரமுத்து உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர். 

இப்படத்தை இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்குவதோடு, ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கவிருக்கிறார். மேலும், இப்படத்தின் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரவத்தை படப்பிடிப்பு தொடங்கும் இடத்தில் அறிவிக்கவுள்ளனர். மனோஜ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. 


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
யாரையும் போட்டியாக நினைப்பதில்லை - சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions