நாயகன் படத்திற்கு பிறகு நான் பார்த்து வியந்த படம்: புதுமுக இயக்குனரை பாராட்டிய பாரதிராஜா

Bookmark and Share

நாயகன் படத்திற்கு பிறகு நான் பார்த்து வியந்த படம்: புதுமுக இயக்குனரை பாராட்டிய பாரதிராஜா

பாபி சிம்ஹா நடிப்பில் வருகிற ஏப்ரல் 10-ந் தேதி வெளிவரவிருக்கும் படம் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’. இப்படத்தில் பாபி சிம்ஹாவுடன் லிங்கா, பிரபஞ்ஜெயன் ஆகியோரும் கதாநாயகர்களாக வருகிறார்கள். சரண்யா சுந்தர்ராஜ், பனிமலர், நிஷா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மருதுபாண்டியன் படத்தை இயக்கி, தயாரித்தும் உள்ளார்.

கிராமத்திலிருந்து சென்னைக்கு பிழைப்பு தேடி வரும் மூன்று இளைஞர்கள். இதில், திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நாயகன், நிம்மதியாக உட்கார்ந்து ஒரு கதை எழுத ஆசைப்படுகிறான். ஆனால், ஒரு வார்த்தைகூட எழுத முடியாத அளவிற்கு அவனது வாழ்வில் சில சம்பவங்கள் நடக்கின்றன. அந்த சம்பவங்கள் என்ன? அந்த கதையை அவன் எழுதி முடித்தானா? என்பதை சுவாரஸ்யமாக சொல்வதே இந்த படம். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை சென்னையிலும், திண்டுக்கல் அருகேயுள்ள வெள்ளோடு, ஆச்சிபுரம் ஆகிய இடங்களிலும்  நடத்தி முடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் மருதுபாண்டியன் இப்படத்தை இயக்குனர்கள் பாரதிராஜா, ராம், தியாகராஜன் குமாரராஜா, பாலாஜி தரணிதரண் ஆகியோருக்கு பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்துள்ளார்.

படத்தை பார்த்தபிறகு இயக்குனர் பாரதிராஜா, ‘நாயகன்’ படத்திற்கு பிறகு நான் பார்த்து வியந்த படம் என்று கூறியுள்ளார். தியாகராஜன் குமாரராஜா சினிமாத்தனம் இல்லாத நல்ல படம் என்று கூறியுள்ளார். பாலாஜி தரணிதரண் இப்படம் உலக சினிமா பார்க்கும் அனுபவத்தை கொடுக்கிறது என்று கூறியுள்ளார். வருகிற 10-ந் தேதி 130 திரையரங்குகளில் இப்படத்தை திரையிட உள்ளனர்.

இந்த படத்தின் கதை குறித்து இயக்குனர் கூறும்போது, என்னுடைய நேரடி அனுபவத்தில் நான் கண்ட விஷயங்களை இந்த படத்தில் கதையான வைத்திருக்கிறேன். இந்த படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் புதியவர்கள்தான் என்று கூறினார். 


Post your comment

Related News
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை
இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு
நானும் ஆன்மீகவாதி தான் பாரதிராஜா பரபரப்பான பேச்சு.
பிரபல இயக்குனரை குரங்கு என்று மேடையில் கூறிய பார்த்திபன்
தமிழன் வேறு எந்த மாநிலத்திலாவது ஆட்சி செய்ய முடியுமா? - பாரதிராஜா
மார்க்கெட் படுத்து தூங்கும்போது டாப்லெஸ் போட்டோ வெளியிட்ட பாரதிராஜாவின் மச்சக்கன்னி
மிக மிக அவசரம் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்திய பாரதிராஜா!
பாரதிராஜாவுக்கு என்னை பிடிக்கும் ஆன பிடிக்காது - ரஜினிகாந்தின் நகைச்சுவையான பேச்சு
பாரதிராஜா படத்தின் இசை உரிமையை பெற்ற யுவன் ஷங்கர் ராஜா
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions