கர்நாடகத்தில் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: பாரதிராஜா

Bookmark and Share

கர்நாடகத்தில் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: பாரதிராஜா

டைரக்டர் பாரதிராஜா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, தமிழர்கள் மீதும், தமிழர்களின் உடைமைகள் மீதும் கொலை வெறிதாக்குதல் நடத்தியும், வாகனங்களுக்கு தீ வைத்தும், கர்நாடக அரசுடன் அரசியல் கட்சிகளும், கைகோர்த்துக்கொண்டு எங்கள் மக்கள் மீது இனவெறியுடன் தாக்குதல் நடத்துகின்ற கர்நாடக அமைப்புகளின் செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஒருவார காலமாக தமிழ்நாடு, கர்நாடக எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவிய நிலையிலும், பெங்களூருவில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் கலவரங்களை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசின் செயல்பாடு கொஞ்சம் வேதனைக்குரியது. இதற்கு மேலும் தாக்குதல் நடத்தா வண்ணம், காவிரி நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு உடனே தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

கர்நாடகாவில் வாழும் பல லட்சம் தமிழர்களுக்கு உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது மத்திய மாநில அரசின் தலையாய கடைமையாகும் என்பதை உணர வேண்டும். சட்டம்-ஒழுங்கு சீரழிந்திருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.

144 தடை உத்தரவுக்கு பிறகும் இத்தகைய பெரிய கலவரங்களும், பஸ் எரிப்பும் இன துவேசத்தைத்தான் வளர்க்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அங்கே வாழும் பல லட்சம் தமிழர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதை எங்கள் உணர்வுகளை அடக்கிக்கொண்டு பவ்யமாக கேட்டுக்கொள்கிறோம். 

மரம் வெட்ட வந்தவர்களை தண்டிக்கிறோம் என்கின்ற பெயரில் ஆந்திராவில் 20 தமிழர்களை சுட்டுக்கொன்றார்கள். முல்லை பெரியாறு பரம்பிக்குளம் அணைப்பிரச்சினையில் எங்கள் தமிழர்களை தாக்குவதும், தற்போது காவிரி நதிநீர் பிரச்சினையில் எங்களது தமிழர்களின் கோடிக்கணக்கான உடைமைகளை சிதைத்தும், தமிழர்களை அடிப்பதும் என்பது நாங்கள் இந்த தேசத்தில்தான் இருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது.

இந்திய அரசு இதுவரை இந்த பிரச்சினையில் தலையிடாதது பெருத்த வருத்தத்தை ஏற்படுத்துவதோடு, 500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தேசத்தில் உள்ள ஒவ்வொரு தேசிய இனங்களும் தனித்தனியாக தங்களை தாங்களே ஆண்டது போல், நாங்களே ஏன் எங்களை ஆண்டுக்கொள்ளக்கூடாது? என்ற கேள்வியை எங்களது இளைஞர் மனதில் நீங்களே விதைத்துவிடாதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நிலைமை மோசமடைவதற்கு முன்னால் மத்திய மாநில அரசுகள் தங்களது கடமையை சரிவர செய்து அமைதியை ஏற்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 


Post your comment





Related News
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை
இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு
நானும் ஆன்மீகவாதி தான் பாரதிராஜா பரபரப்பான பேச்சு.
பிரபல இயக்குனரை குரங்கு என்று மேடையில் கூறிய பார்த்திபன்
தமிழன் வேறு எந்த மாநிலத்திலாவது ஆட்சி செய்ய முடியுமா? - பாரதிராஜா
மார்க்கெட் படுத்து தூங்கும்போது டாப்லெஸ் போட்டோ வெளியிட்ட பாரதிராஜாவின் மச்சக்கன்னி
மிக மிக அவசரம் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்திய பாரதிராஜா!
பாரதிராஜாவுக்கு என்னை பிடிக்கும் ஆன பிடிக்காது - ரஜினிகாந்தின் நகைச்சுவையான பேச்சு
பாரதிராஜா படத்தின் இசை உரிமையை பெற்ற யுவன் ஷங்கர் ராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions