தமிழன் வேறு எந்த மாநிலத்திலாவது ஆட்சி செய்ய முடியுமா? - பாரதிராஜா

Bookmark and Share

தமிழன் வேறு எந்த மாநிலத்திலாவது ஆட்சி செய்ய முடியுமா? - பாரதிராஜா

சென்னை: தமிழ்நாட்டில் யாரும் அரசியல் செய்யலாம். ஆனால், தமிழன் வேறு எந்த மாநிலத்திலாவது ஆட்சி செய்ய முடியுமா? என்று கேட்டுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. இயக்குநர் பேரரசு எழுதிய 'என்னை பிரமிக்க வைத்த பிரபலங்கள்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

விழாவுக்கு பாரதிராஜா தலைமை தாங்கினார். புத்தகத்தை டி.ராஜேந்தர் வெளியிட இயக்குநர் கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார். பாரதிராஜா பேசுகையில், "தமிழகத்தில் தமிழ் மொழிக்கு முதல் இடம் கொடுக்க வேண்டும். முன்பு விழாக்களில் தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் பாடப்படும்.

இறுதியில்தான் தேசிய கீதம் பாடப்படும். நிகழ்ச்சி முடிந்ததை ஜனகன மன பாடிவிட்டார்களா என்று கிண்டலாகக் குறிப்பிடுவார்கள். இப்போது முதலில் ஜனகன மன பாடுகிறார்கள். தமிழில் பாடினால் போதாதா? அதை காப்பாற்ற வேண்டும். தமிழ் நாட்டில் யாரும் அரசியல் செய்யலாம்.

ஆனால், தமிழன் வேறு எந்த மாநிலத்திலாவது ஆட்சி செய்ய முடியுமா? இதை தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். எங்களுக்கு வயது ஆகி விட்டது. தமிழ் இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்," என்றார்.

 


Post your comment





Related News
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை
இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு
நானும் ஆன்மீகவாதி தான் பாரதிராஜா பரபரப்பான பேச்சு.
பிரபல இயக்குனரை குரங்கு என்று மேடையில் கூறிய பார்த்திபன்
மார்க்கெட் படுத்து தூங்கும்போது டாப்லெஸ் போட்டோ வெளியிட்ட பாரதிராஜாவின் மச்சக்கன்னி
மிக மிக அவசரம் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்திய பாரதிராஜா!
பாரதிராஜாவுக்கு என்னை பிடிக்கும் ஆன பிடிக்காது - ரஜினிகாந்தின் நகைச்சுவையான பேச்சு
பாரதிராஜா படத்தின் இசை உரிமையை பெற்ற யுவன் ஷங்கர் ராஜா
மணிரத்னம் மாணவனுக்கு பாரதி ராஜா சொன்னது? என்ன தெரியுமா
செக்ஸ் வேண்டும் என கொச்சையாக வெயிட்டரிடம் கேட்ட பாரதிராஜா பட நாயகி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions