கோவில்பட்டியில் அரிமா சங்க மண்டல மாநாடு: டைரக்டர் பாரதிராஜா பங்கேற்பு

Bookmark and Share

கோவில்பட்டியில் அரிமா சங்க மண்டல மாநாடு: டைரக்டர் பாரதிராஜா பங்கேற்பு

கோவில்பட்டியில் பன்னாட்டு அரிமா சங்கங்களின் கோமேதக மண்டல மாநாடு யுபிஎம்எஸ். பள்ளியில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குநர் பாரதிராஜா கலந்து கொண்டு சமுதாய பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

பள்ளியில் சென்று படித்ததை விட என் கிராம தெருக்களில் படித்த பாடங்கள் தான் அதிகம். மனிதன் தனியாக இருக்கும் போது இந்த சமுதாயத்திற்கு செய்வதற்கு மனம் இருக்காது. அதே நேரத்தில் ஒரு குழுவாக இருக்கும் போது நாம் இணைந்து சேவை செய்வோம்.

அப்படித்தான் இந்த அரிமா, ரோட்டரி போன்ற சங்கங்கள். அவர்கள் மக்களுக்கு பல உதவிகளை செய்து வருவது பாராட்டுக்குரியது. உங்களை போன்று அரசியல் இல்லாத பொதுவான சேவை அமைப்புகள் ஒருங்கிணைந்து குரல் கொடுத்து இருந்தால் இலங்கையில் எப்போதோ பிரச்சினைகள் முடிவுக்கு வந்திருக்கும். இனம், மொழி மற்றும் சமுதாயத்திற்கு இழுக்கு என்றால் நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி எம்.எல்.ஏ. கடம்பூர் செ.ராஜூ, நகர்மன்ற தலைவர் ஜான்சிராணி, அரிமா சங்க நிர்வாகிகள் பரமசிவம், சந்தானம், ராஜீ, முன்னாள் திருப்பணிக்குழு தலைவர் நாகஜோதி, அதிமுக. நகர செயலாளர் சங்கரபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Post your comment





Related News
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை
இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு
நானும் ஆன்மீகவாதி தான் பாரதிராஜா பரபரப்பான பேச்சு.
பிரபல இயக்குனரை குரங்கு என்று மேடையில் கூறிய பார்த்திபன்
தமிழன் வேறு எந்த மாநிலத்திலாவது ஆட்சி செய்ய முடியுமா? - பாரதிராஜா
மார்க்கெட் படுத்து தூங்கும்போது டாப்லெஸ் போட்டோ வெளியிட்ட பாரதிராஜாவின் மச்சக்கன்னி
மிக மிக அவசரம் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்திய பாரதிராஜா!
பாரதிராஜாவுக்கு என்னை பிடிக்கும் ஆன பிடிக்காது - ரஜினிகாந்தின் நகைச்சுவையான பேச்சு
பாரதிராஜா படத்தின் இசை உரிமையை பெற்ற யுவன் ஷங்கர் ராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions