பாரதிராஜாவின் தூக்கத்தை கெடுத்த படம்!

Bookmark and Share

பாரதிராஜாவின் தூக்கத்தை கெடுத்த படம்!

பாபி சிம்ஹா, லிங்கா, பிரபஞ்ஜெயன் என மூன்று ஹீரோக்கள் இணைந்து நடித்துள்ள படம் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது. இந்த படத்தை மருதுபாண்டியன் இயக்கி தயாரித்துள்ளார்.

ஏடிஎம் புரொடக்சன்ஸ் சார்பில் டி.மதுராஜ் படத்தை வெளியிடுகிறார்.  இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. விழாவில், பாரதிராஜா, கே.பாக்யராஜ், பேரரசு, விஜயசேதுபதி, சினேகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பாரதிராஜா பேசுகையில்,

இந்த சென்னைக்கு ஒரு சக்தி உண்டு. இங்கு வருபவர்கள் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டாலும் ஒரு கட்டத்தில் வளர்ச்சி பெற்று இங்கேயே நிரந்தரமாக தங்கி விடுவார்கள். யாரும் இங்கிருந்து திரும்பிச்சென்றதில்லை.

அந்த அளவுக்கு யாரையும் கைவிடாத குணம் இந்த மண்ணுக்கு உண்டு. மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழி சினிமாக்களும் உருவான பூமி இது. முன்பெல்லாம் இங்கு சினிமா சான்ஸ் தேடி வருபவர்கள், ஸ்டுடியோக்களின் கேட்டை உடைத்து உள்ளே செல்வது பெரிய கோட்டையை உடைத்து செல்வது போன்று கடினமான விசயமாக இருந்தது.

ஆனால் இன்றைக்கு அது ரொம்ப எளிதான விசயமாகி விட்டது. கணவனிடம் மகனுக்கு ஒரு சைக்கிள் வாங்கிககொடுங்களேன் என்று சொல்லும் மனைவியே, பையன் ஆசைப்படுறான் அவனை வச்சு ஒரு படம் எடுங்க என்று சொல்லும் அளவுக்கு சினிமா எளிதாகியிருக்கிறது.

மேலும், இப்போதெல்லாம் யாராவது என்னை படம் பார்க்க வாருங்கள், ஆடியோ விழாவுக்கு வாருங்கள் என்று சொன்னாலே எரிச்சலடைகிறேன். 2 மணி நேரத்தை காலி பண்ணப்போகிறோம் என்று எண்ணிக்கொண்டுதான் செல்வேன். அப்படித்தான் இந்த சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படம் பார்க்க இயக்குனர் மருதுபாண்டியன் அழைத்தபோதும் சென்றேன்.

ஆனால், முதல் காட்சியில் இருந்து எண்ட் கார்டு போடும் வரை ஒவ்வொரு காட்சியிலும் என்னை ஆச்சர்யப்படுத்தியிருந்தான். அந்த அளவுக்கு சினிமாத்தனம் என்கிற எந்த பூச்சும் இல்லாமல் நிதர்சனமாக படம் இருந்தது. நம்மிடம் பேசும்போது வார்த்தைகளை விழுங்கி விழுங்கி பேசிய அவனா இப்படியொரு அற்புதமான படத்தை எடுத்திருக்கிறான் என்று ஆச்சர்யப்பட்டுப்போனேன்.

படத்தில் நடித்திருப்பவர்களும்கூட இயல்பாக நடித்திருக்கிறார்கள். கதாநாயகிகளின் மேக்கப் மட்டும்தான் சில இடங்களில் ஓவராக தெரிந்தது. மற்றபடி துளியும் சினிமாத்தனம் இல்லாத ஒரு நல்ல படம் எடுத்திருக்கிறான். மணிரத்னம் கமலை வைத்து இயக்கிய நாயகன் படத்தை பார்த்து விட்டு எனக்கு இரண்டு நாட்களாக தூக்கமே வரவில்லை.

அந்த அளவுக்கு அந்த படம் என்னை பாதித்தது. அதையடுத்து மீண்டும் ஒரு முறை அந்த படத்தை எனக்கு போட்டுக்காட்டுங்கள் என்று சொல்லி பார்த்தேன். அதே நிலைதான் இந்த படத்தை பார்த்தபோதும் எனக்கு ஏற்பட்டது.

படத்தை பார்த்து விட்டு வீடடிற்கு சென்றவனுக்கு தூக்கமே வரவில்லை. அதனால் மறுபடியும் அந்த படத்தை ஒருமுறை பார்த்தேன். இந்த மாதிரி நல்ல விதைகள் எப்போதாவதுதான் முளைக்கும்.

அது பாறைகளுக்கிடையே சிக்கினாலும் பாறைகளை பிச்சிக்கொண்டு வீரியமான விருட்சமாய் வெளியே வரும். அப்படிப்பட்ட படம்தான் இது. என்னை ரொம்பவே நெகிழ வைத்து விட்டது என்றார் பாரதிராஜா.


Post your comment





Related News
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை
இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு
நானும் ஆன்மீகவாதி தான் பாரதிராஜா பரபரப்பான பேச்சு.
பிரபல இயக்குனரை குரங்கு என்று மேடையில் கூறிய பார்த்திபன்
தமிழன் வேறு எந்த மாநிலத்திலாவது ஆட்சி செய்ய முடியுமா? - பாரதிராஜா
மார்க்கெட் படுத்து தூங்கும்போது டாப்லெஸ் போட்டோ வெளியிட்ட பாரதிராஜாவின் மச்சக்கன்னி
மிக மிக அவசரம் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்திய பாரதிராஜா!
பாரதிராஜாவுக்கு என்னை பிடிக்கும் ஆன பிடிக்காது - ரஜினிகாந்தின் நகைச்சுவையான பேச்சு
பாரதிராஜா படத்தின் இசை உரிமையை பெற்ற யுவன் ஷங்கர் ராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions