பாரதிராஜா-பாக்யராஜை காப்பியடித்த பேரரசு!

Bookmark and Share

பாரதிராஜா-பாக்யராஜை காப்பியடித்த பேரரசு!

திருப்பாச்சி, சிவகாசி, திருத்தணி என பல படங்களை இயக்கியவர் பேரரசு. தற்போது திகார் என்ற படத்தை தமிழ், மலையாளத்தில் இயக்கியுள்ளார். சரியான நேரத்தில் படத்தை வெளியிட நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், சமீபகாலமாக எந்த சினிமா விழாக்களுக்கு அழைத்தாலும் கலந்து கொண்டு தான் கடந்து வந்த பாதையில் நடந்த சில விசயங்களையும் பகிர்ந்து கொண்டு வருகிறார் பேரரசு.

அந்த வகையில், விஜய் நடித்த திருப்பாச்சி படத்தை இயக்குவதற்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வினைப்பற்றி அவர் கூறுகையில், அந்த படத்தின் கதையை ரெடி பண்ணிய பிறகு சரியான தலைப்பே கிடைக்கவில்லை.

250 தலைப்புகளை எழுதி விட்டேன். எதுவுமே பிடிக்கவில்லை. இந்த நேரத்தில்தான் ஒருநாள் டிவியில் பாரதிராஜாவின் தாஜ்மஹால் படத்தின் பாடல் கேட்டேன். அதில் திருப்பாச்சி அருவாளை தூக்கிக்கிட்டு வாடா வாடா -என்ற பாடலை கேட்டபோதுதான், திருப்பாச்சி என்ற வார்த்தை பிடித்து விட, அதையே என் படத்துக்கு டைட்டிலாக வைத்தேன்.

அதேபோல, சிவகாசி படத்தில் அசின் நடித்த கேரக்டரை, பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு படத்தில் ஊர்வசியின் கேரக்டரில் இருந்துதான் நான் எடுத்தேன். அந்த படத்தில் முதல் பாதியே முந்தானை முடிச்சு படத்தில் இருந்து எடுத்ததுதான்.

ஆக, எனது திருப்பாச்சி பட டைட்டிலை பாரதிராஜாவின் படப்பாடலில் இருந்து காப்பியடித்த நான்,. சிவகாசி படத்தின் அசின் கதாபாத்திரத்தை பாக்யராஜின் படத்தில் இருந்து காப்பியடித்தேன் என்கிறார் பேரரசு. 

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions