பிரபல இயக்குனரை குரங்கு என்று மேடையில் கூறிய பார்த்திபன்

Bookmark and Share

பிரபல இயக்குனரை குரங்கு என்று மேடையில் கூறிய பார்த்திபன்

பாரதிராஜா, விதார்த் நடிப்பில் குரங்கு பொம்மை என்ற படம் தயாராகி இருக்கிறது. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அதில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன், பாரதிராஜா அவர்களை பற்றி பேசும்போது, பாரதிராஜா அவர்களை பாராட்ட நமக்கு வாழ்நாளே பத்தாது. நான் கொஞ்சம் வித்தியாசமாக அவரை பாராட்ட நினைக்கிறேன். பாரதிராஜா ஒரு சிறந்த குரங்கு.

குரங்கு என்றால் ஒரு வார்த்தை ஆனால் நான்கு எழுத்து உள்ளது. சிறந்த 'கு'ணவான், சிறந்த 'ர'சனையாளர், இ'ங்'கிதம் அறிந்தவர், 'கு'வாலிட்டியான ஒரு மனிதர் என்று கூறியிருந்தார்.

தமிழ் திரையுலகின் சார்பாக பாரதிராஜாவுக்கு மிகப்பெரிய பாராட்டு விழா நாம் எடுத்தே தீர வேண்டும். அந்த ராமாயணத்தில் நானும் ஒரு அணிலாக இருக்க ஆசைப்படுகிறேன், அது விரைவில் நடக்கும் என்றார் பார்த்திபன்.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions