தமிழில் ரீமேக் ஆகிறது பாஸ்கர் தி ராஸ்கல்

Bookmark and Share

தமிழில் ரீமேக் ஆகிறது பாஸ்கர் தி ராஸ்கல்

மலையாள இயக்குனர் சித்திக் தனது பார்டிகார்ட் படத்தை தமிழில் விஜய், அசின் நடிக்க காவலன் என்ற பெயரில் ரீமேக் செய்தார். இதே படத்தை இந்தியிலும் ரீமேக் செய்து இயக்கினார்.

அதன் பிறகு சிறிது இடைவெளிவிட்ட சித்திக் இப்போது மம்முட்டி, நயன்தாரா நடிக்கும் பாஸ்கர் தி ராஸ்கல் என்ற படத்தை மலையாளத்தில் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை தமிழிலும் ரீமேக் செய்ய உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

பாஸ்கர் தி ராஸ்கல் முழுநீள காமெடி படம். பொதுவாக மம்முட்டி காமெடி படங்களில் நடிக்க மாட்டார். இந்தப் படத்தில் எப்படி நடிக்க சம்மதித்தார் என்பது பலரின் மனதில் இருக்கும் கேள்வி.

இது காமெடி படமாக இருந்தாலும் மம்முட்டியின் கேரக்டர் சீரியசானது. ஆனால் அது ஆடியன்சுக்கு காமெடியாக இருக்கும். நீண்ட இடைவெளிக்கு பிறகு நயன்தாராவை மீண்டும் மலையாளப் படத்திற்கு அழைத்து வந்ததில் பெருமை படுகிறேன்.

கதையை கேட்டவுடன் நடிக்க சம்மதித்தார். ஜே.டி சக்கரவர்த்தி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பார்டிகார்ட் போன்று இந்தப் படத்தையும் தமிழில் ரீமேக் செய்வீர்களா? என்பது அதிகம் நான் எதிர்கொள்ளும் கேள்வி. இப்போதுதான் படம் முடிந்திருக்கிறது.

ஏப்ரல் 12ந் தேதி விசு பண்டிகையில் வெளிவருகிறது. படத்துக்கு மலையாள மக்கள் தரும் ஆதரவு. தமிழ் நடிகர்கள் ரீமேக்கிற்கு காட்டும் ஆர்வம் இவற்றை வைத்துதான் தமிழ் ரீமேக் செய்யவது பற்றி கூற முடியும்.

தமிழில் ரீமேக் செய்ய எனக்கு ஆர்வம் இருக்கிறது என்பதை மட்டும்தான் இப்போது என்னால் சொல்ல முடியும். என்கிறார் சித்திக்.


Post your comment





Related News
வருமான வரித்துறை சோதனை - விஜய்சேதுபதி விளக்கம்
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்த கேத்ரீன் தெரசா
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions