இணையத்தில் திருட்டுதனமாக வெளியான பாகுபலி பாடல்கள்?

Bookmark and Share

இணையத்தில் திருட்டுதனமாக வெளியான பாகுபலி பாடல்கள்?

பிரமாண்ட சரித்திர திரைப்படமான பாகுபலி படத்தின் பாடல்கள் வரும் 13 ஆம் தேதி வெளியிடப்படவுள்ள நிலையில் அப்பாடல்கள் இணையத்தில் திருட்டுதனமாக வெளியிடப்பட்டது, படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஆடியோ நிறுவனமான லஹாரி பாகுபலி படத்தின் பாடல்கள் உரிமையை கைப்பற்றியுள்ளது. அந்நிறுவனத்தைச் சேர்ந்த நபர் பாடல்களை இணையத்தில் வெளியிட்டது தெரியவந்துள்ளது. இருப்பினும் படக்குழுவினர் சைபர் கிரைமின் உதவியை நாடி இணையத்திலிருந்து பாடல்களை அகற்றி விட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இசையமைப்பாளர் கீரவாணி இசையமைப்பில் உருவாகியுள்ள எட்டு பாடல்கள்  இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் இப்படம் ஜூலை 10 ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழ்,தெலுங்கு ,மலையாளம்,ஹிந்தி ஆகிய மொழிகளில் பாகுபலி படம் உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் திரைக்கு வரவுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions