கண்டுகொள்ள ஆளில்லை; சந்தோஷப்பட்டார் பாவனா..!

Bookmark and Share

கண்டுகொள்ள ஆளில்லை; சந்தோஷப்பட்டார் பாவனா..!

அட்லாண்டாவில் நடைபெற்ற 'இவிடே' படத்தின் படப்பிடிப்பை முடித்து கேரளா திரும்பியிருக்கிறார் பாவனா.. பிருத்விராஜ், நிவின் பாலி இருவர் நடிக்கும் இந்தப்படத்தில் கதாநாயகி பாவனா தான்.

படத்தின் கதை அட்லாண்டாவில் உள்ள ஐடி நிறுவனங்களில் நடைபெறும் தொடர்கொலைகள் பற்றியது. அட்லாண்டாவை சேர்ந்த போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் பிருத்விராஜ்.

பாவனா ஐடி நிறுவனத்தில் வேலைபார்ப்பவராக நடிக்கிறார். கதைப்படி விவாகரத்து பெற்ற, தனது குழந்தையுடன் தனியே வசிக்கின்ற கேரக்டர் அவருடையது.

இந்தப்படத்தின் இயக்குனர் ஷியாம் பிரசாத்தின் இயக்கத்தில் ஏற்கனவே நடிப்பதற்காக பாவனாவுக்கு வந்த வாய்ப்பு கால்ஷீட் பிரச்சனைகளால் கைநழுவிப்போனது. அதனால் இப்போது வந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டுவிட்டார்.

“ஒரு சில இயக்குனர்கள் தான் நம்மை நம் போக்கில் நடிக்கவிட்டு அதில் திருத்தங்கள் சொல்லி, நம்மிடம் இருந்து சிறந்த நடிப்பை வரவழைப்பார்கள். இயக்குனர்கள் ஜோஷி, ஹரிஹரனை தொடர்ந்து அந்தப்பட்டியலில் ஷியாம் பிரசாத்தை சேர்க்கலாம்.

எனக்கு நடிப்பதற்கு அந்த அளவுக்கு சுதந்திரம் கொடுத்தார்” என இயக்குனர் புராணம் பாடுகிறார் பாவனா. இந்தப்படத்தில் ஹீரோக்கள், ஹீரோயின், இயக்குனர் தவிர மற்ற அனைவருமே அட்லாண்டா நாட்டை சேர்ந்தவர்கள் தானாம்.

அவர்கள் கடும் உழைப்பாளிகள் என்றாலும் குறித்த நேரம் வரை மட்டுமே வேலை செய்வார்களாம். வாரத்தில் ஒரு நாள் காட்டாயம் விடுமுறை எடுத்துக்கொள்வார்களாம்.

அதைவிட பாவனா என்ஜாய் பண்ணிய ஒரு விஷயம், ஷூட்டிங் இல்லாத நேரங்களில் சாலைகளில் நடந்து சென்றபோது யாருக்கும் அவரை அடையாளம் தெரியாததால் நிம்மதியாக ஊரைச்சுற்றிப்பார்த்தராம்.


Post your comment





Related News
நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு
பாவனா பலாத்கார சி.டி.யை வழங்க முடியாது - திலீப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
காதலரை மணந்தார் பாவனா - நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்பு
பாவனா திருமண தேதி திடீர் மாற்றம்
தனது திருமணத்தில் அதிரடி முடிவு எடுத்த நடிகை பாவனா
காருக்குள் நடந்தற்கு சாட்சி யார் தெரியுமா? நடிகை பாவனா பரபரப்பு
நடிகை பாவனா கடத்தல் வழக்கு.. 7 பேர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல்
நடிகை பாவனாவின் கொடூர சம்பவத்திற்கு பின் இருப்பது யார்- வெளியான திடுக் தகவல்
பாவனாவை தொடர்ந்து காரில் கடத்தப்பட்ட நடிகை- தீவிர விசாரணையில் போலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions