நடிகை பாவனாவுக்கு ஆகஸ்டு மாதம் திருமணம்

Bookmark and Share

நடிகை பாவனாவுக்கு ஆகஸ்டு மாதம் திருமணம்

தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்பவர் பாவனா.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவரை ஒரு கும்பல் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தது. இதில், பாவனாவின் கார் டிரைவர்  உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனால் பாவனா, மனம் உடைந்து காணப்பட்டார். அவர், இப்பிரச்சினையில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று மலையாள மற்றும்  தமிழ் திரையுலகினர் வேண்டுகோள் விடுத்தனர். அவருக்கு ஆதரவு கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.

பாவனாவுக்கும் கன்னட திரைப்பட தயாரிப்பாளர் நவீனுக்கும் காதல் இருந்து வந்தது. இப்பிரச்சினைக்கு பிறகு பாவனாவை சந்தித்த  நவீன், அவரை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து நேற்று முன்தினம் திருச்சூரில் இவர்களின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகைகள் மஞ்சுவாரியர்,  சம்யுக்தா, நெருங்கிய உறவினர்கள் உள்பட வெகு சிலரே கலந்து கொண்டனர்.

பாவனா ரகசியமாக நடத்திய நிச்சயதார்த்த நிகழ்ச்சி நேற்று ஊடகங்களில் வெளியானது. இதற்கு பதில் அளித்த பாவனா, இந்த ஆண்டு  இறுதிக்குள் திருமணம் நடக்கும் என்றும், அப்போது அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தற்போது பாவனா, நடிகர் பிரிதிவிராஜுடன் ஆடம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தவிர ஒருசில படங்களிலும் நடிக்கிறார்.  இவற்றின் படப்பிடிப்பு வருகிற ஜூலை மாத இறுதியில் முடிவடையும் என தெரிகிறது. எனவே ஆகஸ்டு மாதம் பாவனாவின்  திருமணம் நடக்குமென்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினர். 


Post your comment





Related News
நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு
பாவனா பலாத்கார சி.டி.யை வழங்க முடியாது - திலீப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
காதலரை மணந்தார் பாவனா - நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்பு
பாவனா திருமண தேதி திடீர் மாற்றம்
தனது திருமணத்தில் அதிரடி முடிவு எடுத்த நடிகை பாவனா
காருக்குள் நடந்தற்கு சாட்சி யார் தெரியுமா? நடிகை பாவனா பரபரப்பு
நடிகை பாவனா கடத்தல் வழக்கு.. 7 பேர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல்
நடிகை பாவனாவின் கொடூர சம்பவத்திற்கு பின் இருப்பது யார்- வெளியான திடுக் தகவல்
பாவனாவை தொடர்ந்து காரில் கடத்தப்பட்ட நடிகை- தீவிர விசாரணையில் போலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions