பாவனா நடிக்கும் ஓபன் யுவர் ஹார்ட்!

Bookmark and Share

பாவனா நடிக்கும் ஓபன் யுவர் ஹார்ட்!

ஐந்து மாதங்களுக்கு முன்பு பாவனா அப்படி சொன்னபோது பலரும் ஆச்சர்யப்பட்டார்கள்.. இவருக்கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா என சிலரும், சரிதான் மார்க்கெட் போய்விட்டது போல என சிலரும் கிசுகிசுக்க ஆரம்பித்தார்கள்..

அப்படியென்ன சொன்னார் பாவனா.. மலையாளத்தில் உருவாகும் குறும்படம் ஒன்றில் நடிக்கபோகிறேன் என்றுதான் சொன்னார். அதற்குத்தான் மேலே சொன்ன கமெண்ட்டுகள் பறந்தன.

கன்னடத்திலும் மலையாளத்திலும் ஓரளவு பிஸியாகவே இருக்கும் பாவனா குறும்படத்தில் நடிக்கிறார் என்றால் ஆச்சர்யமான விஷயம் தான்.  ஓபன் யுவர் ஹார்ட்  என்கிற பெயரில் மூன்று சிறிய கதைகளை உள்ளடக்கி உருவாகும் இந்த குறும்படம், அதன் மூலம் சமூகத்திற்கு ஒரு மெசேஜையும் சொல்கிறதாம். இதில்  பெண்ணு கானல்  என்கிற முதல் கதையில் தான் பாவனா நடிக்கிறார்.

மலையாளத்தில் துல்கரின் நண்பனாக  தீவ்ரம்  மற்றும்  பகிடா ,  இன்சைடர்ஸ்  ஆகிய படங்களில் சின்னசின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ள விஷ்ணு ராகவ் என்கிற நடிகர் தான் இந்த குறும்படத்தை இயக்குகிறார்.

ஒரு இயக்குனராக மாற விரும்பும் விஷ்ணு ராகவ் அதன் முதல் படியாகத்தான் இந்த குறும்படத்தை இயக்குகிறாராம். சாய்குமார், பிந்து பணிக்கர் போன்ற சினிமா நட்சத்திரங்கள் சிலரும் இதில் நடிக்கிறார்களாம்.


Post your comment





Related News
நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு
பாவனா பலாத்கார சி.டி.யை வழங்க முடியாது - திலீப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
காதலரை மணந்தார் பாவனா - நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்பு
பாவனா திருமண தேதி திடீர் மாற்றம்
தனது திருமணத்தில் அதிரடி முடிவு எடுத்த நடிகை பாவனா
காருக்குள் நடந்தற்கு சாட்சி யார் தெரியுமா? நடிகை பாவனா பரபரப்பு
நடிகை பாவனா கடத்தல் வழக்கு.. 7 பேர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல்
நடிகை பாவனாவின் கொடூர சம்பவத்திற்கு பின் இருப்பது யார்- வெளியான திடுக் தகவல்
பாவனாவை தொடர்ந்து காரில் கடத்தப்பட்ட நடிகை- தீவிர விசாரணையில் போலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions