திருமணம் பற்றி நான் சிந்திக்கவில்லை: பாவனா

Bookmark and Share

திருமணம் பற்றி நான் சிந்திக்கவில்லை: பாவனா

தனது தந்தையின் மரணத்தால் திருமணம் குறித்து தற்போது எந்த சிந்தனையும் இல்லை என்று நடிகை பாவனா கூறியிருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த நடிகை பாவனா 'நம்மள்' என்ற படத்தின் மூலமாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என்று அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் பாவனா நடித்திருக்கிறார். பாவனா தற்போது தாய் மொழியான மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழில் சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பாவனா. தொடர்ந்து வெயில், கிழக்குக் கடற்கரை சாலை, தீபாவளி, ஜெயம் கொண்டான் மற்றும் அசல் ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தார்.

இவர் நடிப்பில் வெளியான அசல் படத்தைத் தொடர்ந்து தமிழில் வேறு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் தற்போது மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்த செப்டம்பர் 24ம் தேதி பாவனாவின் தந்தை பாலச்சந்திரன் எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார். இவர் மலையாள சினிமாவில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பாவனா சமீபத்தில் அளித்த பேட்டியில் "எனது தந்தையின் மறைவு என்னை மிகவும் பாதித்து விட்டது. இன்னும் வீட்டில் எனது தந்தை எனக்காக காத்திருப்பது போலவே உணர்கிறேன். என்னால் எனது தந்தையின் நினைவுகளை மறக்க முடியவில்லை.

எனினும் நான் தற்போது நடித்து வரும் 'ஹலோ நமஸ்தே' படக்குழுவினர் என் மீது மிகவும் அன்பு காட்டுகின்றனர். எனக்காக 2 வாரங்கள் தங்களது படப்பிடிப்பை தள்ளி வைத்த படக்குழுவினர், என்னை தொடர்ந்து உற்சாகமூட்டி வருகின்றனர்.

ஒரு படத்திலாவது ஆண் வேடத்தில் நடிக்க வேண்டும் என்பதே எனது கனவாக உள்ளது. எனினும் அது இதுவரை நிறைவேறவில்லை. சிறிய வயதில் நான் நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன் கடவுள் அருளால் அது நடந்து விட்டது.

எனது திருமணத்தை அடுத்த ஆண்டு நடத்த எனது குடும்பத்தினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் எதிர்பாராமல் எனது தந்தை இறந்து போனதால், எனது திருமணம் குறித்து நான் சிந்திக்கவில்லை. உண்மையில் சொல்லப் போனால் நானோ எனது குடும்பத்தினரோ என்னுடைய திருமணம் குறித்து தற்போது சிந்திக்கும் மனநிலையில் இல்லை".

என்று பாவனா தெரிவித்திருக்கிறார்.


Post your comment

Related News
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
96 பட ரீமேக்கில் பாவனா
நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு
பாவனா பலாத்கார சி.டி.யை வழங்க முடியாது - திலீப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
காதலரை மணந்தார் பாவனா - நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்பு
பாவனா திருமண தேதி திடீர் மாற்றம்
தனது திருமணத்தில் அதிரடி முடிவு எடுத்த நடிகை பாவனா
காருக்குள் நடந்தற்கு சாட்சி யார் தெரியுமா? நடிகை பாவனா பரபரப்பு
நடிகை பாவனா கடத்தல் வழக்கு.. 7 பேர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions