தமிழ் படத்துக்கு ஏங்கும் பாவனா

Bookmark and Share

தமிழ் படத்துக்கு ஏங்கும் பாவனா

சித்திரம் பேசுதடி மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் மலையாள நடிகை பாவனா. அதன் பிறகு கிழக்கு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, கூடல் நகர், ஆர்யா, ராமேஸ்வரம், வாழ்த்துக்கள், ஜெயம்கொண்டான் படங்களில் நடித்தார். அஜித்துடன் அசல் படத்தில் நடித்தார். 

அஜித்துடன் நடித்து விட்டதால் இனி நாம்தான் தமிழில் டாப் என்று நினைத்தார். ஆனால் அசல் படம் தோல்வி அடையவே அதன் பிறகு பாவனாவுக்கு தமிழில் வாய்ப்புகள் அமையவில்லை.

இதனால் மலையாளம், கன்னடப் படங்களில் நடித்தார். இப்போது கன்னட பட வாப்பும் இல்லை. சொப்பனங்கால் சுந்தரம், அட்வென்சர் ஆஃப் ஓமனக்குட்டன் படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

பாவனாவுக்கு மீண்டும் தமிழில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்கிற ஆசை வந்திருக்கிறது. இதனால் தமிழுக்கென்று புதிய மானேஜரை நியமித்து வாய்ப்பு தேடி வருகிறார். "மலையாளம், கன்னடப் படங்களில் தீவிரமாக இருந்தால் தமிழில் கவனம் செலுத்தவில்லை.

எனக்கேற்ற நல்ல கதைகளும் அமையவில்லை. இப்போது தமிழில் கதை கேட்டு வருகிறேன். நல்ல கேரக்டர் அமையும்போது நடிப்பேன். அது விரைவில் நடக்கும்" என்கிறார் பாவனா.


Post your comment





Related News
நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு
பாவனா பலாத்கார சி.டி.யை வழங்க முடியாது - திலீப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
காதலரை மணந்தார் பாவனா - நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்பு
பாவனா திருமண தேதி திடீர் மாற்றம்
தனது திருமணத்தில் அதிரடி முடிவு எடுத்த நடிகை பாவனா
காருக்குள் நடந்தற்கு சாட்சி யார் தெரியுமா? நடிகை பாவனா பரபரப்பு
நடிகை பாவனா கடத்தல் வழக்கு.. 7 பேர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல்
நடிகை பாவனாவின் கொடூர சம்பவத்திற்கு பின் இருப்பது யார்- வெளியான திடுக் தகவல்
பாவனாவை தொடர்ந்து காரில் கடத்தப்பட்ட நடிகை- தீவிர விசாரணையில் போலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions