நடிகை கீர்த்தி சுரேஷையும் கடத்த திட்டமிட்டான்: பாவனா கார் டிரைவர் பற்றி திடுக்கிடும் தகவல்கள்

Bookmark and Share

நடிகை கீர்த்தி சுரேஷையும் கடத்த திட்டமிட்டான்: பாவனா கார் டிரைவர் பற்றி திடுக்கிடும் தகவல்கள்

பாவனா கார் டிரைவர் சுனில் நடிகை கீர்த்தி சுரேஷையும் கடத்த திட்டமிட்டான் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகை பாவனாவை கடத்தி பாலியல் கொடுமை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கார் டிரைவர் சுனில்  தலைமறைவாக இருக்கிறான். அவனைப்பற்றி மலையாள திரைஉலகினர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு  வருகிறார்கள்.

டிரைவர் சுனில் நடிகை பாவனாவிடம் கார் டிரைவராக பணியாற்றிய போது அவர் மூலம் பல மலையாள நடிகைகளுடன்  பழக்கம் ஏற்பட்டது. அவர்களது நடவடிக்கைகளை கவனித்த சுனில் நடிகைகளை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டான்.

அப்போது நடிகை கீர்த்தி சுரேஷ்மீது அவனது பார்வை விழுந்தது. இவர் பழைய நடிகை மேனகாவின் மகள் ஆவார். மேனகா  1980-களில் தமிழில் `ராமாயி வயசுக்கு வந்துட்டா', `சாவித்திரி, கண்ணாடி', ரஜினியுடன் `நெற்றிக்கண்', உள்ளிட்ட படங்களில்  நடித்து முன்னணி நடிகையாக விளங்கினார்.

தற்போது அவரது மகள் கீர்த்தி சுரேஷ் தமிழில் நடிகையாக ‘இது என்ன மாயமோ’ படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். தொடர்ந்து  `ரஜினிமுருகன்', `ரெமோ', `தொடரி', `பைரவா' ஆகிய வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

கீர்த்தி சுரேஷ் கைவசம் நிறைய படங்கள் இருப்பதால் அவரை கடத்தி பணம் பறிக்கலாம் என்று சுனில் திட்டமிட்டான். இதற்காக  கீர்த்தி சரேஷின் கார் டிரைவருடன் சுனில் நட்பு ஏற்படுத்திக்கொண்டு தனது திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தான். அதற்கு  அவனும் சம்மதித்தான்.

கீர்த்தி சுரேஷ் எப்போது தனியாக காரில் போவார் என்று டிரைவர் மூலம் நோட்டமிட்டான். செல் போனில் ‘ஒய்’ என தகவல்  அனுப்பினால் இன்று கடத்தலாம் என்றும், ‘எக்ஸ்’ என்றால் இன்று கடத்து வதற்கான சூழ்நிலை இல்லை என்றும் ரகசிய வார்த்  தைகளை பரிமாறிக் கொள்வது என முடிவு செய்தனர்.

சம்பவத்தன்று அவசரத்தில் அந்த டிரைவர் ‘ஒய்’ என தவறுதலாக சுனிலுக்கு செல்போனில் தகவல் அனுப்பிவிட்டான் உடனே  சுனில் தனது கும்பலுடன் சென்று கீர்த்தி சுரேஷ் காரை மடக்கு நிறுத்தி உள்ளே ஏறி கடத்திச் சென்றான். ஆனால் அதன் பிறகு  தான் காரில் இருந்தது கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா என தெரியவந்தது. அவரை கடத்தி பயன் இல்லை என்பதால்  விட்டுவிட்டான்.

குடும்ப கவுரவம் கருதி இது பற்றி மேனகா குடும்பத்தினர் போலீசில் புகார் செய்யவில்லை. தற்போது சுனில் பற்றிய தகவல்கள்  வெளியானதும் அவன் தான் கீர்த்தி சுரேஷை கடத்த திட்டமிட்டவன் என்பதை மேனகாவின் கணவர் சுரேஷ்குமார் அறிந்து  அதிர்ச்சி அடைந்தார். அவர் தான் சுனில் பற்றிய தகவலை தனது நண்பர்கள் மூலம் வெளியிட்டுள்ளார்.


Post your comment

Related News
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions