பாவனாவை கடத்திய குற்றவாளி தொடர்பு கொண்ட முக்கிய பிரமுகர் யார்? மணிகண்டன் வாக்குமூலம்

Bookmark and Share

பாவனாவை கடத்திய குற்றவாளி தொடர்பு கொண்ட முக்கிய பிரமுகர் யார்? மணிகண்டன் வாக்குமூலம்

தமிழ், மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவனா.

தற்போது இவர் மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார். கேரள மாநிலம் திருச்சூரில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட  பின்பு கடந்த 17-ந்தேதி இரவு காரில் கொச்சிக்கு திரும்பினார்.

அப்போது இவரது கார் மீது இன்னொரு வேன் மோதியது. வேனில் இருந்து இறங்கிய கும்பல் பாவனா காருக்குள் அத்துமீறி  நுழைந்தனர். அவர்கள் பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். இதனை செல்போனில் படமும் எடுத்தனர். கார் கொச்சி  அருகே சென்றதும் அந்த கும்பல் காரில் இருந்து இறங்கி தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவம் பற்றி நடிகை பாவனா, மலையாள டைரக்டர் லாலிடம் தெரிவித்தார். அவர் மூலம் போலீசாருக்கு தகவல்  கொடுக்கப்பட்டது. கொச்சி போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டின் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் கோவையில் பதுங்கி  இருந்த மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் பாலக்காடு பகுதியில் பதுங்கி இருந்த மணிகண்டன் என்பவரும்  பிடிபட்டார்.


மணிகண்டனை கைது செய்த போலீசார் அவரை கொச்சிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்,  போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-


கேரள திரையுலகில் நடிகர், நடிகைகளுக்கு கார் டிரைவர்கள் ஏற்பாடு செய்து கொடுக்கும் சுனில் குமாருடன் எனக்கு நெருங்கிய  பழக்கம் உண்டு. அவர் கூறும் செயல்களை நான் செய்து முடிப்பேன். அதற்கு அவர், பணம் கொடுப்பார்.


நாங்கள் பாவனாவை கடத்தியதும் சுனில்குமாருக்கு தெரிவித்தோம். அவர், வழியில் காரை நிறுத்தி ஏறிக் கொண்டார். அவர்தான்  பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு அவரை மிரட்டவும் செய்தார். பாவனா கடத்தப்பட்டதும் சுனில்குமார் முக்கிய  பிரமுகர் ஒருவருக்கு செல்போனில் பேசியதோடு, குறுந்தகவலும் அனுப்பினார்.

அந்த நபர் யார்? என்பது எனக்கு தெரியாது. நாங்கள் பாவனாவுடன் காரில் சுமார் 2 மணி நேரம் இருந்தோம். இந்த கடத்தல்  வேலை முடிந்ததும், நாங்கள் காரில் இருந்து இறங்கி கொண்டோம். மறுநாள் சுனில்குமாரை சந்தித்தோம். ஆனால் அவர்,  கடத்தலுக் கான பணம் தரவில்லை. மாறாக இந்த சம்பவம் போலீசாரின் கவனத்திற்கு சென்றதை தெரிவித்தார்.எனவே நாங்கள்  தலைமறைவாகி விட்டோம். ஆனால் போலீசார் என்னை பாலக்காடு பகுதியில் வைத்து பிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

மணிகண்டன் உடனடி யாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக் கப்பட்டார். அவரை மீண்டும் போலீஸ் காவலில்  எடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மணிகண்டன் கூறிய தகவல்கள் உண்மைதானா? என்பதை கண்டறியும் பணி  யும் நடக்கிறது.

இதற்காக மணிகண்டன் மற்றும் சுனில்குமாரின் செல்போன் எண்களை வைத்து சம்பவம் நடந்த நாளில் அவர்கள் யார்? யாரிடம்  பேசினார்கள். என்னென்ன குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டது என்பதை கண்டுபிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

போலீசாரின் விசாரணை தீவிரமாக நடந்து வரும் நிலையில் இந்த சம்பவத்தில் அரசியல் பிரமுகர் மற்றும் பிரபல நடிகருக்கு  தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் அடிப்படையில் போலீசார் அந்த நடிகர்  மற்றும் அரசியல் பிரமுகரிடம் சாதாரண உடையில் சென்று விசாரணை நடத்தினர்.

அவர்களின் வீடுகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கிடைத்த தகவல்களை போலீசார் ரகசியமாக வைத்துள்ளனர். விரைவில்  குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் அப்போது சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர்கள் யார்?  என்பதை தெரிந்து கொள்ளலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions