பாவனாவை தொடர்ந்து காரில் கடத்தப்பட்ட நடிகை- தீவிர விசாரணையில் போலீஸ்

Bookmark and Share

பாவனாவை தொடர்ந்து காரில் கடத்தப்பட்ட நடிகை- தீவிர விசாரணையில் போலீஸ்

நடிகை பாவனா காரில் கடத்தப்பட்ட விஷயம் திரையுலகினரையும் தாண்டி பலரையும் அதிர்ச்சியாக்கி இருந்தது. இந்நிலையில் நடிகை அர்ச்சனா கௌதமுக்கு சமூக வலைதளம் மூலம் ஒருவர் அறிமுகமாகி நண்பராகி இருக்கிறார்.

அவர் அர்ச்சனாவிடம் ஜவுளிக்கடை விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும், தன்னுடன் வந்தால் ரூ.50 ஆயிரம் அட்வான்ஸ் வாங்கித் தருவதாகவும் அழைத்துள்ளார். இதனை நம்பிய அர்ச்சனா அந்த நபருடன் காரில் சென்றுள்ளார். வழியில் அந்த நபரின் நண்பர்கள் சிலரும் காரில் வந்துள்ளனர்.

ஆனால் திடீரென அவர் சிபிஐ அதிகாரி என்றும் அர்ச்சனா மீது விபச்சார வழக்கு தொடருவேன் என்று மிரட்டி அவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர்.

அர்ச்சனா தன் அண்ணனுக்கு போன் செய்து தகவலை கூற, அவரும் பணத்துடன் விமான நிலையம் வருவதாக கூறியிருக்கிறார். கார் விமான நிலையத்திற்குள் சென்றதும் அர்ச்சனா காரில் இருந்து திடீரென கூச்சல் போட்டுள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் அர்ச்சனாவை காப்பாற்றினர்.

உடனே காரில் இவருந்தவர்கள் தப்பித்து ஓட, ஒருவர் மட்டும் பிடிபட்டதாகவும் அவரை காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions