விஜய் பட வாய்ப்பை மிஸ் செய்துவிட்டேன் - பாவனா வருத்தம்

Bookmark and Share

விஜய் பட வாய்ப்பை மிஸ் செய்துவிட்டேன் - பாவனா வருத்தம்

சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மலையாளத்து நடிகை பாவனா. தொடர்ந்து தீபாவளி, அசல் உள்ளிட்ட நிறைய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

ஒருக்கட்டத்தில் தமிழ் சினிமாவிற்கு பிரேக்விட்டு முழுக்க முழுக்க மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

இதற்கிடையே தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்ற பாவனா, இந்த கோடையை முழுவதுமாக அமெரிக்காவில் கொண்டாடிவிட்டு நாடு திரும்பியிருக்கிறார்.

இந்தியா திரும்பிய பாவனாவிடம் நாம் தொடர்பு கொண்டு பேசியதாவது... என்ன பாவனா தமிழ் சினிமாவில் நடிக்க கூடாது என்றே முடிவு பண்ணிவிட்டீர்களா, இந்தபக்கம் உங்களை பார்த்தே பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்று கேட்டபோது... அய்யய்யோ அப்படியெல்லாம் இல்லை. நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்.

விஜய்யுடன் புலி படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த நேரம் நான் அமெரிக்கா செல்ல கமிட்டாகிவிட்டதால் என்னால் அந்தப்படத்தில் நடிக்க முடியவில்லை.

புலி படம் என்பதை விட விஜய் படத்தை மிஸ் செய்தது கொஞ்சம் வருத்தம் தான். தற்போது மலையாளத்தில், அட்வென்ஜர்ஸ் ஆப் ஓமணகுட்டன் என்ற படத்தில் நடித்து வருகிறேன். இதுதவிர இன்னும் இரண்டு படங்களில் நடிக்கிறேன். தமிழில் நல்ல கதைகள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறினார். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions