என்னுடைய நிச்சயதார்தத்தின் பின்னணி என்ன தெரியுமா ? பாவனா ஓபன் டாக்

Bookmark and Share

என்னுடைய நிச்சயதார்தத்தின் பின்னணி என்ன தெரியுமா ? பாவனா ஓபன் டாக்

நடிகை பாவனாவுக்கு நேற்று தயாரிப்பாளர் நவீனுடன் கேரளா திருச்சூரில் உள்ள அவரது இல்லத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

பாவனா தான் யாரை காதலிக்கிறேன் என்பதை இதுவரையும் சர்ப்ரைசாக வைத்திருந்தார். சமீபத்தில் தான் அவர் யார் என தெரிந்தது. இதுகுறித்து பாவனா அளித்துள்ள பேட்டியில், கன்னட மொழியில் நான் ரோமியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது எனக்கும் அதன் தயாரிப்பாளர் நவீனுக்கும் நட்பு வந்தது. பின் காதலாக மாறியது.

கடந்த வருடமே திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தோம். ஆனால் என் அப்பா இறந்துபோனதால் அது தள்ளி வைக்கப்பட்டது என்றார்.

அந்த கொடூரமான சம்பவத்தில் இருந்து மீண்டு இப்போது தைரியமாக இருக்கிறேன். ஏற்கனவே நான் ஒப்புக்கொண்ட படங்களை நடித்து கொடுப்பேன். திருமணத்திற்கு பிறகும் நடிப்பேன் என பாவனா கூறினார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions