கடன் பாக்கி பிரச்சினை: பூலோகம் படம் வெளிவருவதில் மேலும் சிக்கல்

Bookmark and Share

கடன் பாக்கி பிரச்சினை: பூலோகம் படம் வெளிவருவதில் மேலும் சிக்கல்

ஜெயம் ரவி-திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பூலோகம்’. ஆஸ்கார் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் பணிகள் முடிவடைந்து ரீலீசுக்கு தயாராக இருக்கிறது. கடந்த வருடமே வெளிவரும் என்று எதிர்பார்த்த இந்த படம் பல்வேறு பிரச்சினைகளால் முடங்கிக் கிடக்கிறது.

இந்நிலையில், இப்படத்துக்கு மேலும் ஒரு பிரச்சினை எழுந்துள்ளது. அதாவது, இந்த படத்தை தயாரிப்பதற்காக ஆஸ்கார் நிறுவனம் ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் நகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.40 கோடி கடன் பெற்றுள்ளது.

ஆனால், படம் இன்னும் வெளிவராத நிலையில், ரூ.40 கோடியை செலுத்தாமல் பூலோகம் படத்தை வெளியிடுவதற்கு ஆஸ்கார் நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும். முழுத் தொகையையும் செலுத்திய பிறகே படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும் என்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சென்னையில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு நேற்று கடன் வசூல் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், ஏப்ரல் 16-ந் தேதி வரை பூலோகம் படத்தை வெளியிட தடை விதித்தும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவுக்கு பதிலளிக்க ஆஸ்கார் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டது. 


Post your comment





Related News
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions