இரண்டாவது வாய்ப்பையும் இழந்த பூலோகம்...!

Bookmark and Share

இரண்டாவது வாய்ப்பையும் இழந்த பூலோகம்...!

பேராண்மை படத்தில் நடித்தபோது எஸ்.பி.ஜனநாதனிடம் உதவியாளராக இருந்த கல்யாணகிருஷ்ணன் சொன்ன கதையைக் கேட்டு இம்ப்ரஸ்ஸான ஜெயம்ரவி நடிக்க ஓகே சொன்னார். 

அதன் பிறகு ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் பூலோகம் கதையைக் கேட்டு அந்தப் படத்தை தயாரித்தார். 2010 ஆம் ஆண்டு இப்படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கி, 2012 ல் படப்பிடிப்பு தொடங்கியது. பூலோகம் படம் முடிவடைந்து சுமார் மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. 

பல படங்களை தயாரித்து வந்ததால் அந்தப் படங்களை ரிலீஸ் செய்துவிட்டு பூலோகம் படத்தை ரிலீஸ் செய்யலாம் என எண்ணிய தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிக்கு ஏற்பட்ட பொருளாதார பிரச்சனை காரணமாக பூலோகம் படத்தை வெளியிட முடியாவில்லை.

அதற்கு இன்னொரு காரணம் ஜெயம் ரவிக்கு அப்போது மார்க்கெட் இல்லை. சில மாதங்களுக்கு முன் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான ரோமியோ ஜூலியட் படம் கமர்ஷியலாக வெற்றியடைந்தது. 

அந்த நேரத்தில் பூலோகம் படத்தை வெளியிட முயற்சி செய்திருந்திருக்கலாம், அல்லது தற்போது தனி ஒருவன் படம் வெற்றியடைந்த காரணத்தினால் ஜெயம்ரவி மார்க்கெட் மறுபடி சூடுபிடித்திருக்கிறது. 

இந்த நேரத்தில் பூலோகம் படத்தை வெளியிட முயன்றால் தான் உண்டு. இந்த சந்தர்ப்பத்தையும் தவறிவிட்டால் பூலோகம் படத்தை இனி எக்காலமும் வெளியிட முடியாது என்கின்றனர் விநியோகஸ்தர்கள்.


Post your comment





Related News
எல்லோரும் பார்த்து ரசிக்கக் கூடிய படைப்புதான் பூலோகம்- இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன்!
பூலோகம் படத்திற்கு அரசு கொடுத்த சலுகை!
முன்பதிவில் ஜெயம் ரவியின் ‘பூலோகம்’!
ஜெயம்ரவி மறந்து விட்ட பூலோகம்!
இசை வெளியாகியும், வெளியாகாத படங்கள்...!
பூலோகம் படத்துக்காக 15 கிலோ வெயிட் போட்டேன்! ஜெயம்ரவி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions