ஜெயம்ரவி மறந்து விட்ட பூலோகம்!

Bookmark and Share

ஜெயம்ரவி மறந்து விட்ட பூலோகம்!

ஜெயம்ரவி நடிப்பில் ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்த படம் பூலோகம். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பே தயாரிக்கப்பட்ட அப்படம் இன்னும் திரைக்கு வராமல் கிடக்கிறது.

இதோ அதோ என்று முதலில் சொன்னவர்கள் இப்போது எதுவுமே சொல்வதில்லை. மேலும், அந்த படத்துக்காக கடும் உடற்பயிற்சி செய்து பாக்சராக நடித்த ஜெயம்ரவிதான் அப்படத்தை ரொம்பவே எதிர்பார்த்தார். தயாரிப்பு கம்பெனியிடமும் படத்தை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டு வந்தார்.

ஆனபோதும் இப்போதுவரை அப்படம் கிடப்பில் கிடக்கிறது. அதனால் கிட்டத்தட்ட ஜெயம்ரவி அப்படியொரு படத்தில் நடித்ததையே மறந்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த சமயத்தில் ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்து வெளியான, மரியான், வல்லினம், திருமணம் என்னும் நிக்கா என சில படங்கள் வரிசையாக தோல்வியடைந்ததால், பூலோகம் படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு சம்பளம்கூட கொடுக்க முடியவில்லையாம்.

இப்போதுவரை அது கொடுக்கப்படாமலேயே இருக்கிறதாம்.  ஆனால், அப்படம் வெளியாகாமல் இருப்பதற்கு அதன் பட்ஜெட்டே முக்கிய காரணம் என்று இப்போது சொல்கிறார்கள்.

அதாவது, ஜெயம் ரவிக்கு இருக்கிற வியாபாரத்தை கருத்தில் கொண்டு 15 கோடியில் அந்த படத்தை முடிக்க வேண்டும் என்பதுதான் திட்டமாம். ஆனால், படத்தை முடித்தபோது 25 கோடியாகி விட்டதாம்.

அதனால் படத்தின் ரேட்டை உயர்த்தி விட்டார்களாம். ஆனால், அவர்கள் சொல்லும் தொகையை கொடுத்து படத்தை வாங்கினால் போட்ட பணத்தை எடுப்பது அரிதான விசயமாம். அதனால்தான் விநியோகஸ்தர்கள் பின்வாங்கி விட்டார்களாம்.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions