பெரிய படங்களுக்கு நாள் குறித்த தயாரிப்பாளர் தாணு

Bookmark and Share

பெரிய படங்களுக்கு நாள் குறித்த தயாரிப்பாளர் தாணு

பெரிய பட்ஜெட் படங்கள் வரவால் சிறிய படஜெட் படங்கள் பாதிக்கப்படுவதால் தயாரிப்பாளர் சங்கம் இன்று அதிரடி முடிவு எடுத்துள்ளது.

சிறிய முதலீட்டு படங்களின் வெளியீட்டில் ஏற்பட்டுள்ள சிரமத்தையும், அவர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பையும் கருத்தில் கொண்டு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ரூ.15 கோடி மற்றும் அதற்கு அதிக பொருட்செலவில் தயாராகும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை அதன் தயாரிப்பாளர்கள், பொங்கல், குடியரசு தினம், தமிழ்ப்புத்தாண்டு, மே தினம், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் ஆகிய பத்து நாட்களில் மட்டுமே வெளியிட வேண்டும் என்றும், 15 கோடிக்கு கீழ் தயாரிக்கப்படும் திரைப்படங்களை அதன் தயாரிப்பாளர்கள் விரும்பும் எந்தவொரு நாட்களிலும் வெளியிட்டுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டம் வருகிற ஜூன் மாதம் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. 


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions