பிக்பாஸ் 2 - பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபலங்கள்

Bookmark and Share

பிக்பாஸ் 2 - பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபலங்கள்

கடந்த ஆண்டு பரபரப்புக்குள்ளாகி தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த பாகம் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. கடந்த முறை போலவே இந்த முறையும் கமலே தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின் டீசரை நடிகர் கமல் கடந்த சனிக்கிழமை வெளியிட்டார். 

இதில் கலந்துகொள்ள பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்த பிரபலங்கள் பட்டியலில் இனியா, ராய்லக்ஷ்மி, லட்சுமி மேனன், ஜனனி ஐயர், சொர்ணமால்யா, பூனம் பாஜ்வா, ப்ரியா ஆனந்த், நந்திதா, ஆலியா மானசா, ரகஷிதா, கீர்த்தி சாந்தனு, பரத், ஷாம், சாந்தனு, அசோக் செல்வன், ஜித்தன் ரமேஷ், படவா கோபி, பவர் ஸ்டார் சீனிவாசன், ப்ரேம்ஜி, பாலசரவணன், தாடி பாலாஜி, ஜான் விஜய் ஆகியோர் இடம்பெற்று இருப்பதாக தெரிகிறது. 

இதிலிருந்து சிலர் வெளியேறலாம் என்றும் தகவல் வருகிறது. கடந்த முறை பிக்பாசில் கலந்துகொண்டவர்கள், புகழின் உச்சிக்கே சென்றார்கள். எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போட்டி ஏற்பட்டுள்ளது. சில இளம் நடிகர், நடிகையர் கலந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் சிலர் யார் தங்களுடன் தங்கப்போகிறார்கள் என்ற விவரம் கேட்கிறார்களாம். இன்னும் ஓரிரு தினங்களில் இறுதி பட்டியல் வெளியாகும் என்கிறார்கள். 


Post your comment





Related News
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
4 நாட்களில் ரூ. 400 கோடி வசூல்: 2.0 வேற லெவல்
பிரமாண்டத்தால் பிரமிக்க வைத்துவிட்டனர்: 2.0 படத்துக்கு பிரபலங்கள் பாராட்டு
10 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகியும், இங்கு ரிலீசாகவில்லை - தவறவிட்ட 2.0 படக்குழு
சோழன் பயணம் தொடர வேண்டும் - செல்வராகவன் ஆர்வம்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions