பிருத்விராஜ்-பிஜுமேனன் கூட்டணியில் உருவாகும் 'அனார்கலி'..!

Bookmark and Share

பிருத்விராஜ்-பிஜுமேனன் கூட்டணியில் உருவாகும் 'அனார்கலி'..!

காதல், ஆக்சன்.. அவ்வளவு ஏன் ஆர்ட் பிலிம் ரேஞ்சுக்கு கூட வெரைட்டியான கதாபாத்திரங்களால் கலக்கி வருகிறார் பிருத்விராஜ்.. சமீபத்தில் ராணுவ வீரராக இவர் நடித்து மலையாளத்தில்  வெளியான 'பிக்கெட்-43' படத்தில் இவரது நடிப்பிற்கு பாராட்டுகளும், படத்திற்கு வசூலும் குவிந்து வருகின்றன.

தற்போது காவிய காதல் நாயகியான 'அனார்கலியின் பெயரில் மலையாளத்தில் ஒரு படம் உருவாக இருக்கிறது.. இதில் ரொமான்டிக் ஹீரோவாக நடிக்கிறார் பிருத்விராஜ். இவருடன் மற்றுமொரு முக்கியமான வேடத்தில் நடிகர் பிஜுமேனன் நடிக்க இருக்கிறார்.

இவர்கள் இருவரும் ஏற்கனவே அர்ஜுனன் சாட்சி, ராபின்ஹூட், மாஸ்டர்ஸ் உட்பட சில படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். முன்னெல்லாம் வில்லன் வேடங்களுக்கென்றே முத்திரை குத்தப்பட்டிருந்த பிஜுமேனன் காமெடி கலந்த ஹீரோவாக தனது ரூட்டை மாற்றியபின்னர் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டில் இதுவரை பல வெற்றிகளை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல கதாசிரியர் சாச்சி இயக்குனராக அறிமுகமாகும் 'அனார்கலி' படத்தின் படப்பிடிப்பு இந்தமாதமே துவங்கும் என்று தெரிகிறது. 


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions