'சோலோ ஹீரோ வித் காமெடி' - ரூட்டை பிடித்த பிஜுமேனன்..!

Bookmark and Share

'சோலோ ஹீரோ வித் காமெடி' - ரூட்டை பிடித்த பிஜுமேனன்..!

கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான 'வெள்ளிமூங்கா' படத்திற்காக பிஜுமேனனை சோலோ ஹீரோவாக தேர்ந்தெடுத்தபோது வேண்டாம் இந்த ரிஸ்க் என்று பலரும் சொன்னார்கள்.

ஆனால் அந்தப்படத்தின் இயக்குனர் ஜிபு ஜேக்கப்போ, நாற்பது வயதாகியும் திருமணமாகாத, 22 வயது இளம்பெண்ணை காதலிக்கின்ற தனது கதையின் ஹீரோ பாத்திரத்திற்கு பிஜுமேனன் தான் பொருத்தமானவர் என உறுதியாக நின்றார்.

பலன்... 3 கோடியில் எடுக்கப்பட்ட படம் 20 கோடி லாபம் சம்பாதித்தது. அதற்கேற்ற மாதிரி பிஜுமேனனும் தற்போது காமெடி ரூட்டை கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்கிறார்.

இப்போது மீண்டும் ஒரு படத்தில் சோலோ ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு பிஜுமேனனை தேடிவந்திருக்கிறது.  அந்தப்படத்தை இயக்குபவர் இயக்குனர் ஷஜூன் கரியல்.. மோகன்லால், மம்முட்டி, சுரேஷ்கோபி என மும்மூர்த்திகளையும் வைத்து படம் இயக்கி ஜென்ம சாபல்யம் பெற்றவர்.

தனது கதைக்கு பிஜுமேனன் தான் பொருத்தமாக இருக்கிறார் என டோக்கன் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்துவிட்டார். ஏற்கனவே இவர் இயக்கிய 'வடுக்கும்நாதன்', 'சேட்டாயீஸ்' போன்ற படங்களில் முக்கியமான வேடங்களில் பிஜுமேனன் நடித்திருக்கிறார்.

தற்போது இவர் ஜெயராமை வைத்து இயக்கிவரும் 'சர் சி.பி' படம் முடிந்ததும், அதேபோல 'ஆர்டினரி' புகழ் சுகீத் டைரக்சனில் பிஜுமேனன் துபாயில் தற்போது நடித்துவரும் 'மதுர நாரிங்கா' படத்தை முடித்துவிட்டு வந்ததும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என தெரிகிறது.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions