தொல்லை கொடுத்தவர்களுக்கு பில்லா ஸ்டைலில் பதிலடி கொடுத்த அஜித்!

Bookmark and Share

தொல்லை கொடுத்தவர்களுக்கு பில்லா ஸ்டைலில் பதிலடி கொடுத்த அஜித்!

அஜித் இன்று சினிமாவில் உச்சத்தில் இருக்கிறார். அவரை படத்தில் மட்டும் தான் பார்க்க முடியும் என்றாகிவிட்டது. பிதாமகன் படத்திற்கு பிறகு பாலா அஜித்தை வைத்து நான் கடவுள் படம் எடுக்க முனைந்தார்.

ஆனால் சில காரணங்களாக இப்படம் மூன்று வருடமாக தள்ளிப்போனது. அஜித் 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்துவிட்டு பாலாவுக்காகக் காத்திருந்தார். நீண்ட முடி, தாடி என படத்திற்காக வளர்த்திருந்தார்.

ஒருபக்கம் படத்தை தயாரிக்க இருந்த ஏ.எம்.ரத்னம் படத்திலிருந்து விலகினார். கடைசி வரை பாலா கதையை அஜித்திடம் சொல்லவே இல்லையாம். பின் அஜித் பி.வாசு இயக்கத்தில் பரமசிவன் படத்தில் கமிட் ஆனார்.

இதனால் நான் கடவுள் படக்குழு அவருக்கு பிரஷர் கொடுத்தார்களாம். அஜித், வாங்கிய அட்வான்ஸையும் கொடுக்க நான் ரெடி என இருந்தாராம். அப்போது தான் அன்புச்செழியன் கும்பலால் அஜித் மிரட்டப்பட்டுள்ளார்.

அப்போது அஜித் பில்லா ஸ்டைலில் துப்பாக்கியை முன்வைத்து இது லைசென்ஸ் பெறப்பட்ட துப்பாக்கி. தற்காப்புக்காக பயன்படுத்த முடியும் என கூறியதும் அந்த கும்பல் ஓடிவிட்டதாம்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions